செப்டம்பர் 30: மீடியாடெக் சிப்செட் வசதியுடன் களமிறங்கும் மோட்டோ டேப் ஜி20.!
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ டேப் ஜி20 மாடலை வரும் செப்டம்பர் 30-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் அம்சங்கள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ டேப் ஜி20 சாதனம் ஆனது 8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோ டேப் ஜி20 மாடலில் மீடியாடெக் ஹீலியோ பி22டி சிப்செட் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா நிறுவனம்.

மோட்டோ டேப் ஜி20 சாதனத்தில்; 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா உள்ளன. மேலும் 5100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதேபோல் வைஃபை, ப்ளூடூத் 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ டேப் ஜி20 சாதனம். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தமோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி50 5ஜி சாதனத்தின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உள்ளிட்ட அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி, வைஃபை ஏசி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ், 5 ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போன்.
அதேபோல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் மோட்டோ டேப் ஜி20 சாதனம் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் பல்வேறு மோட்டோரோலா சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications