அறிமுகமானது புது Moto டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. டால்பி விஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய மோட்டோ பேட் 70 ப்ரோ (Moto Pad 70 Pro) மாடலை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்து. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
மோட்டோ பேட் 70 ப்ரோ அம்சங்கள் (Moto Pad 70 Pro Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 chipset) உடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

13-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், 3.5கே ரெசல்யூஷன் (3.5K Resolution), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 99 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
டால்பி அட்மாஸ் மற்றும் ஜேபிஎல் (JBL) ட்யூன் செய்யப்பட்ட குவாட்-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது புதிய மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல். எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மோட்டோ பென் ப்ரோ ஸ்டைலஸ் (Moto Pen Pro stylus) உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.
மோட்டோ பேட் 70 ப்ரோ 13எம்பி ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமரா உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
10200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
வைஃபை 7, ப்ளூடூத் 6.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய சாதனத்தில் உள்ளது.

மோட்டோ பேட் 70 ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலின் விலை ரூ.36,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 ப்ரோ (கீபோர்டு) மாடலின் விலை ரூ.45,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. மேலும் இந்த டேப்லெட் ஜூலை 4 முதல் விற்பனைக்கு வரும். இதனை பிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா மற்றும் முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications