ஜூன் 27-ல் களமிறங்கும் புது மோட்டோ டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஜூன் 27-ம் தேதி இந்தியாவில் மோட்டோ பேட் 70 ப்ரோ (Moto Pad 70 Pro) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
மோட்டோ பேட் 70 ப்ரோ அம்சங்கள் (Moto Pad 70 Pro Specifications): 13-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், 3.5கே ரெசல்யூஷன் (3.5K Resolution), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 99 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 chipset)உடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
டால்பி அட்மாஸ் மற்றும் ஜேபிஎல் (JBL) ட்யூன் செய்யப்பட்ட குவாட்-ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது புதிய மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல். எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக மோட்டோ பென் ப்ரோ ஸ்டைலஸ் (Moto Pen Pro stylus) உடன் இந்த டேப்லெட் வரும்.
13எம்பி சிங்கிள் ரியர் கேமரா உடன் மோட்டோ பேட் 70 ப்ரோ அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடீயோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமரா வழங்கப்படும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

10200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
வைஃபை 7, ப்ளூடூத் 6.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடலில் உள்ளன. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த 2டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய சாதனத்தில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ டேப்லெட் சற்று உயர்வான விலை அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications