அறிமுகமானது புதிய Moto 5ஜி டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ பேட் 70 (moto pad 70) மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 5ஜி சப்போர்ட், 10200எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் இந்த மோட்டோ டேப்லெட் வெளியாகி உள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ பேட் 70 அம்சங்கள் (moto pad 70 specifications): 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய மோட்டோ பேட் 70 மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் பிரைட்னஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் இந்த மோட்டோ பேட் 70 மாடல் வெளியாகி உள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் மோட்டோ பேட் 70 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மோட்டோ பேட் 70 மாடல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த மாடலுக்கு இரண்டு வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி ஆட்டோ போகஸ் ரியர் கேமரா உடன் மோட்டோ பேட் 70 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் இந்த மோட்டோ டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 dust and splash resistance)உடன் வெளியாகி உள்ளது மோட்டோ பேட் 70 மாடல். 5ஜி, வைஃபை 5 802.11 ஏசி, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
10200எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோ பேட் 70 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் இரண்டு நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மோட்டோ பேட் 70 விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 மாடலின் விலை ரூ.33,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 மாடலின் விலை ரூ.36,999-ஆக உள்ளது.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா.இன் இணையதளங்களில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.5000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications