Home
Tablets

அதிருது இந்திய மார்க்கெட்.. JBL ஆடியா.. 10200mAh பேட்டரி.. வருகிறது புதிய மோட்டோ டேப்லெட்.. எந்த மாடல்?

மோட்டோ பேட் 70 க்ரூவ் (Moto Pad 70 Groove) மாடலை வரும் ஜூலை 31-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது மோட்டோரோலா நிறுவனம். தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ டேப்லெட் வெளியாகும். இந்நிலையில் இந்த டேப்லெட் மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ பேட் 70 க்ரூவ் அம்சங்கள் (Moto Pad 70 Groove Specifications): மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், 2.5கே ரெசல்யூஷன் (3.5K Resolution), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 99 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது மோட்டோ டேப்லெட்.. எந்த மாடல்?

டைமன்சிட்டி 7400 பிராசஸர் (Dimensity 7400 processor) உடன் மோட்டோ பேட் 70 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

அதுவும் 13எம்பி ரியர் கேமரா உடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் 10200எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது மோட்டோ டேப்லெட்.. எந்த மாடல்?

இந்த டேப்லெட்டின் பின்புற பேனலில் உள்ள பிரம்மாண்டமான ஸ்பீக்கர் கிரில் வசதி உள்ளது. அந்நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, நான்கு ட்வீட்டர்கள் ( tweeters), மூன்று வூஃபர்கள் (woofers) மற்றும் இரண்டு பாசிவ் ரேடியேட்டர்களை (passive radiators) கொண்ட இந்தியாவின் முதல் 9-ஸ்பீக்கர் JBL அமைப்பு இதுவாகும்.

தனித்துவமான டால்பி அட்மாஸ் ட்யூனிங், ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் ரூ.35,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Pad 70 Groove price and specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X