அறிமுகமானது புதிய மோட்டோ டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 OS.. எந்த மாடல்? என்ன விலை?
மோட்டோரோலா நிறுவனம் நிறுவனம் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடலை (Moto Pad 70 Groove) இன்று (ஜூலை 31) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ டேப்லெட் வெளியாகி உள்ளது. இப்போது மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மோட்டோ பேட் 70 க்ரூவ் அம்சங்கள் (Moto Pad 70 Groove Specifications): 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் டால்பி விஷன், 2,560 x 1,600 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 சப்போர்ட், 2.5கே ரெசல்யூஷன் (2.5K Resolution), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் (octa-core MediaTek Dimensity 7400 chipset) உடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் இந்த மோட்டோ டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் இந்த பேட்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 18 வரை ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். இதுதவிர நான்கு வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்களும் இந்த பேட்லெட் மாடலுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் வெளியாகி உள்ளது. கூகுள் ஜெமினி, சர்க்கிள் டு சேர்ச், ஸ்மார்ட்டர் ரீடர், ஏஐ ரைட்டிங் டூல்ஸ், ஏஐ நோட்ஸ் போன்ற மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய மோட்டோ டேப்லெட் மாடலில் உள்ளன. அதுவும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் நான்கு ட்வீட்டர்கள் ( tweeters), மூன்று வூஃபர்கள் (woofers) மற்றும் இரண்டு பாசிவ் ரேடியேட்டர்களை (passive radiators) கொண்ட இந்தியாவின் முதல் 9-ஸ்பீக்கர் JBL யூனிட் கொண்ட மாடல் இதுவாகும். மேலும் இந்த மோட்டா டேப்லெட் மாடல் டால்பி அட்மாஸ் ஆதரவையும் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
13எம்பி ரியர் கேமரா உடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த டேப்லெட் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் 10200எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடல் உடன் இன்-பில்ட் 360-டிகிரி கிக்ஸ்டாண்ட் 2.0 கிடைக்கிறது. இது லீன், ஸ்டாண்ட், தியேட்டர், போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் போன்ற வசதிகளை ஆதரிக்கிறது. ப்ளூடூத் 5.4,வைஃபை 6, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடலின் விலை ரூ.36,999-ஆக உள்ளது. பான்டோன் ப்ளூ சர்ஃப் கலரில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும். குறிப்பாக வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா இணையதளம் மூலம் இந்த புதிய டேப்லெட் மாடலை வாங்க முடியும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி மோட்டோ பேட் 70 க்ரூவ் மாடலை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது.


Click it and Unblock the Notifications