பொளக்குது விற்பனை.. 7040mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. QUAD ஸ்பீக்கர்கள்.. 8GB ரேம்.. எந்த மாடல்?
மோட்டோரோலோ நிறுவனத்தின் மோட்டோ பேட் 60 நியோ (Moto pad 60 NEO) மாடலானது, தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. 11 இன்ச் டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்கள், 7040mAh பேட்டரி மட்டுமல்லாமல், 5ஜி வேகம் சப்போர்ட் கொண்ட மீடியா டெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட்டை கொடுக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 10 சதவீத தள்ளுபடி விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.21,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,699 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மோட்டோ பேட் 60 நியோ (Moto pad 60 NEO) முக்கிய அம்சங்கள்: இந்த டேப்லெட் 11 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 2.5K ரெசொலூஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டியூவி ரைன்லேண்ட் ஃபிளிக்கர் ஃப்ரீ (TUV Rheinland Flicker Free) சப்போர்ட் கொடுக்கிறது. லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) கிடைக்கிறது.
ஆகவே, கண்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த மோட்டோ பேட் 60 நியோ டிஸ்பிளே அவுட்புட் கொடுக்கும். பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில், மீடியா டெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) ஆக்டா கோர் பிராசஸர் கிடைக்கிறது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு (microSD) மூலம் இதன் ஸ்டோரேஜை 2 டிபி வரையில் வரை நீட்டித்து கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்துள்ளது. ஆட்டோ ஃபோகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி ரியர் கேமராவும், வீடியோ கால்கள் மற்றும் செல்ஃபிக்களுக்காக 5 எம்பி செல்பீ கேமராவும் இந்த மோட்டோ பேட் 60 நியோ டேப்லெட்டில் உள்ளன.
ஆடியோவை பொறுத்தவரை, 3.5 மிமீ ஆடியோ ஜாக், குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. குவாட் ஸ்பீக்கர்கள் கிடைப்பதால், ஸ்டீரியோ அனுபவம் பக்காவாக இருக்கும். 20W சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7040mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 68W அதிவேக சார்ஜர் கொடுக்கப்படுகிறது.
இந்த பேட்டரியுடன் 6.99 மிமீ தடிமன் மற்றும் 480 கிராம் எடையை கொடுத்துள்ளது. மேலும், டஸ்ட் மற்றும் வாட்டர் புரொடெக்சன் கொடுக்க IP52 ரேட்டிங் இந்த மோட்டோ பேட் 60 நியோ மாடலில் கொடுக்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டியை (Connectivity) பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), 4ஜி எல்டிஇ (4G LTE) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
மேலும், வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் (GPS + GLONASS + Galileo + A-GPS) கிடைக்கிறது. யுஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் (PANTONE Bronze Green) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் குவாலிட்டியில் டேப்லெட் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications