Home
Tablets

செப்டம்பர் 12 வரை வெயிட் பண்ணுங்க.. டால்பி அட்மாஸ்.. 7040mAh பேட்டரி.. வருகிறது புது Moto 5ஜி டேப்லெட்..

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ பேட் 60 நியோ (Moto Pad 60 Neo) எனும் டேப்லெட் மாடலை வரும் செப்டம்பர் 12-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த மோட்டோ பேட் 60 நியோ மாடலின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மோட்டோ பேட் 60 நியோ அம்சங்கள் (Moto Pad 60 Neo Specifications): 11-இன்ச் 2.5கே டிஸ்பிளே வசதியுடன் மோட்டோ பேட் 60 நியோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 12 வரை வெயிட் பண்ணுங்க.. வருகிறது புது Moto 5ஜி டேப்லெட்!

அதேபோல் இந்த டேப்லெட் 5ஜி சப்போர்ட் கொண்டுள்ளது. அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் மோட்டோ பேட் 60 நியோ மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய மோட்டோ டேப்லெட் மாடலில் உள்ளது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் அதாவது நான்கு ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த இந்த இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு பல ஆடியோ அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. பின்பு இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் இந்த புதிய மோட்டோ பேட் 60 நியோ மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவரும். பின்பு பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே மோட்டோ பேட் 60 நியோ மாடல் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

7040mAh பேட்டரி உடன் மோட்டோ பேட் 60 நியோ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோ பேட் 60 நியோ மாடலில் உள்ளன. பின்பு இந்த டேப்டெல் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto Pad 60 Neo India Launch Date Announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X