Home
Tablets

Motorola அறிமுகம் செய்த புதிய 5ஜி டேப்லெட்.. 7040mAh பேட்டரி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ பேட் 2026 மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும். அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ பேட் 2026 அம்சங்கள்: 11-இன்ச் 2.5கே ரெசல்யூஷன் கொண்ட டிஸ்பிளே உடன் மோட்டோ பேட் 2026 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(90Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Motorola அறிமுகம் செய்த புதிய 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 பிராசஸர் (MediaTek Dimensity 6300 processor) உடன் இந்த மோட்டோ பேட் 2026 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் மோட்டோ பேட் 2026 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

டால்பி அட்மாஸ் சப்போர்ட் (Dolby Atmos support) கொண்ட குவாட் ஸபீக்கர் சிஸ்டம் (Quad speaker system) கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ டேப்லெட் மாடல். ஆகவே இந்த இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

8எம்பி ரியர் கேமரா உடன் இந்த மோட்டோ பேட் 2026 மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

IP52 ரேட்டிங் கொண்டுள்ளது புதிய மோட்டோ பேட் 2026 மாடல். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த மோட்டோ டேப்லெட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Motorola அறிமுகம் செய்த புதிய 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

7040mAh பேட்டரி உடன் மோட்டோ பேட் 2026 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் 5ஜி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதேபோல் இந்த சாதனம் பாண்டோன் பிராஞ்ச் கிரீன் நிறத்தில் வாங்க கிடைக்கும்.

மோட்டோ பேட் 2026 மாடலில் விலை $249.99 (இந்திய மதிப்பில் ரூ.23,152)-ஆக உள்ளது. ஏப்ரல் 30 முதல் அமெரிக்காவில் இந்த டேப்டெல் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto Pad 2026 with 7000mAh battery launched: check specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X