Home
Tablets

இனி சாம்சங் டாப்ளெட் பக்கம் ஒருத்தனும் போக மாட்டான்; செக் வைத்த சியோமி.!

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ள

By Muthuraj

பல வகையான விலை பிரிவுகளின் கீழ், பலதரப்பட்ட ஸ்மார்ட்போங்களை களமிறக்கி, உலக நாடுகளின் ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் பிரிவை ஆளும் சியோமி நிறுவனம், இன்று அதன் மி பேட் 4 டாப்ளெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி சாம்சங் டாப்ளெட் பக்கம் ஒருத்தனும் போக மாட்டான்.!

இந்த டாப்ளெட்டின் முக்கிய சிறப்பம்சமாக அதன் விலை மற்றும் வன்பொருள் அம்சங்கள் திகழ்கிறது. சியோமி நிறுவனம் இதுவரை மூன்று டாப்ளெட்களை வெளியிட்டுள்ளது - மி பேட், மி பேட் 2 மற்றும் மி பேட் 3. இருந்தாலும் கூட மி பேட் 3 சேர்த்து நிறுவனத்தின் எந்த டாப்ளெட்டும் ஒரு பெரிய வெற்றியை பெறவில்லை. அந்த வெற்றியை சியோமி மி பேட் 4 பெறும் என்றே தோன்றுகிறது.

ப்ளூடூத் 5.0 மற்றும் முக்கியமாக எல்டிஇ ஆதரவு.!

ப்ளூடூத் 5.0 மற்றும் முக்கியமாக எல்டிஇ ஆதரவு.!

ஏனெனில் சியோமி மி பேட் 4 ஆனது ஸ்னாப்ட்ராகன் 660 AIE SoC உடன் இயங்குகிறது. ஒரு 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த சாதனம் ப்ளூடூத் 5.0 மற்றும் முக்கியமாக எல்டிஇ ஆதரவை கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் 1099 யுவான்கள் என்கிற விலையில் (தோராயமாக ரூ.11,500/-) அறிமுகம் ஆகியுள்ளது என்பதை நம்பவே முடியவில்லை.

இனி சாம்சங் டாப்ளெட்டுகள் பக்கம் செல்ல மாட்டார்கள்.!

இனி சாம்சங் டாப்ளெட்டுகள் பக்கம் செல்ல மாட்டார்கள்.!

தற்போது வரையிலாக சீன சந்தையில் மட்டுமே வாங்க கிடைக்கும் இந்த டாப்ளெட் ஆனது கூடிய விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். அதோடு சேர்த்து, இதுநாள் வரை சாதிக்காத டாப்ளெட் சந்தையிலான வெற்றியை சியோமி உறுதி செய்யும் என்பதிலும் ஐயமில்லை. இன்னும் குறிப்பாக டாப்ளெட் மீது ஆசைகொள்ளும் இந்திய மக்கள், இனி சாம்சங் டாப்ளெட்டுகள் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றே கூறலாம்.

ஐ மோட், ஸ்டாண்டர்ட் மோட், என்ஹாண்ச்ட்டு மோட், அடாப்டிவ் மோட்.!

ஐ மோட், ஸ்டாண்டர்ட் மோட், என்ஹாண்ச்ட்டு மோட், அடாப்டிவ் மோட்.!

அம்சங்களை பொறுத்தமட்டில், மி பேட் 4 ஆனது ஒரு 8 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே, 1200 x 1920 என்கிற அளவிலான பிக்சல்கள் மற்றும் 1200: 1 என்கிற அளவிலான திரை விகிதத்தை கொண்டிருக்கும். பார்வை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஐ மோட், ஸ்டாண்டர்ட் மோட், என்ஹாண்ச்ட்டு மோட், அடாப்டிவ் மோட் மற்றும் பல காட்சி முறைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது

இந்த டாப்ளெட் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது க்வால்காமில் இருந்து கிடைக்கும் சிறந்த மிட்ரேன்ஞ்வரம்புக்குட்பட்ட SoC-க்களில் ஒன்றாகும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு என்கிற இரண்டு சேமிப்பு மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப் / 2.0 துளை கொண்ட ஒரு 13 எம்பி பின்பக்க கேமரா.!

எப் / 2.0 துளை கொண்ட ஒரு 13 எம்பி பின்பக்க கேமரா.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், மி பேட் 4 ஆனது எப் / 2.0 துளை கொண்ட ஒரு 13 எம்பி பின்பக்க கேமராவை கொண்டுள்ளது. இது 30fps-இல் 1080பி வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய திறன் கொண்டது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ஒரு 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த டாப்ளெட்டில் ஏஐ (AI) அடிப்படையிலான ஃபேஸ் அன்லாக் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கேமரா ஆப்பில் - HDR மோட், ஏஐ பியூட்டி மோட் மற்றும் பல அம்சங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரி.!

6000mAh பேட்டரி.!

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. ஒரு 6000mAh பேட்டரி கொண்டு இந்த டாப்ளெட் சக்தியூட்டப்படுகின்றது. இது ஆற்றல் வாய்ந்த ஸ்னாப்ட்ராகன் 660 SoC உடன் இணைந்து அதிக அளவிலான பேட்டரி ஆயுளை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும் இந்த டாப்ளெட்டில் ஸ்மார்ட் கேம் ஆக்சலேரேஷன் அம்சமும் உள்ளது. இது கேமிங் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

சியோமி மி பேட் 4 விலை மற்றும் கிடைக்கும் தன்மை.!

சியோமி மி பேட் 4 விலை மற்றும் கிடைக்கும் தன்மை.!

நாம் ஏற்கனவே அறிந்தபடி, சியோமி சாதனங்கள் எப்பொழுதும் மிகப்பெரிய அம்சங்களை கொண்டிருக்கும். ஆனாலும் கூட மலிவான அல்லது நியாயமான விலை நிர்ணயத்தை கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த டாப்ளெட் ஒன்றும் விதிவிலக்கல்ல. மி பேட் 4-ன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மாடல் ஆனது 1099 யுவானுக்கும் (சுமார் ரூ.11,500), 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் (வைஃபை ஆதரவுடன்) ஆனது 1299 யுவானுக்கும் (சுமார் ரூ.13,636) வாங்க கிடைக்கும். எல்டிஇ மாறுபாடான 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மாடல் ஆனது 1499 யுவானுக்கு (தோராயமாக ரூ.15,735/-க்கு) விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mi Pad 4 Could Get Back Xiaomi to Winning Ways in the Tablet Market. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X