இந்தியாவில் வாங்க சிறந்த 5G டேப்லெட் மாடல்கள்: இதோ பட்டியல்.!
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை போன்று 5ஜி டேப்லெட் மாடல்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை கொண்டுவந்துவிட்டன. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க உள்ளன.
அதேபோல் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தற்போது 5ஜி டேப்லெட் மாடல்களை தான் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக இப்போது வெளிவரும் டேப்லெட்களில் அதிநவீன கேமரா மற்றும் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த வாங்க சிறந்த 5ஜி டேப்லெட் மாடல்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்
6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பேட் எக்ஸ் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த 5ஜி டேப்லெட் மாடலை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ரியல்மி பேட் எக்ஸ் மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி பேட் எக்ஸ் அம்சங்கள்
ரியல்மி பேட் எக்ஸ் மாடல் ஆனது 11-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 13எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 8340எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குளம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா டேப் பி11 5ஜி டேப்லெட்
லெனோவா நிறுவனத்தின் லெனோவா டேப் பி11 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், குவாட் ஸ்பீக்கர்கள், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 11-இன்ச் டிஸ்பிளே வசதி, 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், டால்பி விஷன் ஆதரவு, 7500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலை அமேசான் தளத்தில் ரூ.68,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த 5ஜி டேப்லெட் ஆனது S Pen ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட், 13எம்பி + 6எம்பி டூயல் ரியர் கேமரா, 12எம்பி செல்பி கேமரா, 8000 எம்ஏஎச் பேட்டரி, குவாட் ஸ்பீக்கர்கள், 11-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது.

ஆப்பிள் ஐபேட் (10th Gen)
ஆப்பிள் ஐபேட் ((10th Gen) மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.57,500-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 10.9-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 12எம்பி ரியர் கேமரா, 12எம்பி செல்பி கேமரா, Lithium Polymer பேட்டரி, iPadOS 16 ஆதரவு, ஏ14 பயோனிக் சிப், Wi-Fi+5G ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஆண்டு பல முன்னணி நிறுவனங்கள் 5ஜி டேப்லெட் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன. அதேபோல் 5ஜி ஸ்மார்ட்போன்களும் இந்த ஆண்டு அதிகமாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








