பட்ஜெட் விலையில் 10.35-இன்ச் Tablet; அதுவும் பிரபல TV கம்பெனியிடம் இருந்து!

|

ஆஹா! ஆரம்பமே நல்லா இருக்கே.. ஸ்மார்ட் டிவிகளை தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்திடம் இருந்து ஒரு டேப்லெட்-ஆ? அதுவும் 10.35-இன்ச் அளவிலான டிஸ்பிளேவுடன்!

சூப்பர்-சூப்பர், மேல சொல்லுங்க!

அது என்ன கம்பெனி? அறிமுகமான Tablet-இன் மாடல் பெயர் என்ன? அது என்ன விலைக்கு வெளியாகி உள்ளது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்று... மிகவும் அதிகமாக ஆர்வமடைய வேண்டாம்.

ஏனெனில் இந்த கட்டுரையில் (அதாவது இந்த டேப்லெட்டில்) சில டிவிஸ்ட்களும் உள்ளன!

முதல் டிவிஸ்ட் என்னவென்றால்.. இது ஒரு LG டேப்லெட்!

முதல் டிவிஸ்ட் என்னவென்றால்.. இது ஒரு LG டேப்லெட்!

எல்ஜி-க்கு என்னப்பா குறை.. நல்ல கம்பெனி தானே? என்று கேட்டு விடாதீர்கள். நினைவூட்டும் வண்ணம், தென் கொரிய பன்னாட்டு நிறுவனமான எல்ஜி, ஸ்மார்ட்போன் வணிகத்தில் இருந்து "கிட்டத்தட்ட" வெளியேறி விட்டது.

அப்படியானதொரு நிறுவனத்திடம் இருந்து தான் ஒரு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு டிவிஸ்டும் இருக்கிறது. ஆனால் அதை கடைசியாக சொல்கிறோம், அதற்கு முன் இந்த எல்ஜி டேப்லெட்டின் அம்சங்கள் மற்றும் விலையை பற்றி பார்த்து விடலாம்.

வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!வெறும் ரூ.999 & ரூ.844-க்கு இப்படியும் கூட Smart Watch கிடைக்குமா? நம்பவே முடியல!

இராணுவ தரத்திலான LG Tablet!

இராணுவ தரத்திலான LG Tablet!

எல்ஜி நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆக எல்ஜி அல்ட்ரா டேப் (LG Ultra Tab) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 10.35 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 7040mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் ஒரு ஆண்ட்ராய்டு 12 டேப்லெட் ஆகும்.

இந்த எல்ஜி டேப்லெட் ஆனது அமெரிக்க இராணுவத்தின் MIL-STD 810G தரநிலையையும் கடந்துள்ளது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்.. இது கடினத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

எல்ஜி நிறுவனத்தின் பெரும்பாலான டேப்லெட்களும் ராணுவ தரத்தில் தான் உருவாக்கப்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளேவின் 4 பக்கங்களிலும் ஸ்பீக்கர்!

டிஸ்பிளேவின் 4 பக்கங்களிலும் ஸ்பீக்கர்!

எல்ஜி அல்ட்ரா டேப்-இன் IPS LCD டிஸ்பிளே ஆனது 5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2000 x 1200 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டுள்ளது.

மேலும் இதன் டிஸ்பிளேவின் நான்கு பக்கங்களிலும் ஸ்பீக்கர்கள் உள்ளன மற்றும் இந்த டேப்லெட் எல்ஜி வாகாம் ஸ்டைலஸ் (LG Wacom Stylus) ஆதரவையும் கொண்டு வருகிறது.

கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!கீபோர்ட்ல இந்த ஷார்ட்கட்ஸ் கூட தெரியலனா.. ஆபீஸ்ல ரொம்ப அசிங்கமா போயிடும்!

ரியர் மற்றும் செல்பீ கேமரா பற்றி?

ரியர் மற்றும் செல்பீ கேமரா பற்றி?

கேமராக்களை பொறுத்தவரை - முன்பக்கத்தில் - வீடியோ கால்கள் மற்றும் செல்பீக்களுக்காக 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பின்புறத்தில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது.

விலைக்கு ஏற்ற ப்ராசஸர்; நல்ல ஸ்டோரேஜ்!

விலைக்கு ஏற்ற ப்ராசஸர்; நல்ல ஸ்டோரேஜ்!

எல்ஜி அல்ட்ரா டேப் ஆனது ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ கொண்டு இயங்கும் டேப்லெட் ஆகும்.

3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புது OnePlus Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புது OnePlus Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!

பேட்டரி - உண்மையிலேயே

பேட்டரி - உண்மையிலேயே "வெயிட்டு" தான்!

ஏனெனில் எல்ஜி அல்ட்ரா டேப் ஆனது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,040mAh பேட்டரியை பேக் செய்கிறது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, இதில் டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி போர்ட் போன்றவைகள் உள்ளன. மேலும் முன்னரே குறிப்பிட்டபடி, இது குவாட் ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.

விலை, விற்பனையில் தான் அடுத்த டிவிஸ்ட்!

விலை, விற்பனையில் தான் அடுத்த டிவிஸ்ட்!

அது என்னவென்றால், சார்கோல் க்ரே (Charcoal Gray) என்கிற ஒரே ஒரு வண்ணத்தின் கீழ் மட்டுமே வெளியாகி உள்ள, எல்ஜி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது தற்போது வரையிலாக நிறுவனத்தின் தென் கொரிய இணையதளத்தில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது.

அதாவது இது எப்போது இந்திய அறிமுகத்தை சந்திக்கும் அல்லது இந்தியாவில் வாங்க கிடைக்கும் என்கிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அது குறித்த தகவல் கிடைத்தத்தும் நாங்கள் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!அறிமுகமான வேகத்துல இப்படி ஒரு ஆபரா! அதுவும் இந்த Samsung 5G போன் மீது!

LG Ultra Tab விலை நிர்ணயம் என்ன?

LG Ultra Tab விலை நிர்ணயம் என்ன?

இந்த எல்ஜி டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.26,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இது இந்தியாவிற்கு வரும்போது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஏனெனில் ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒப்போ பேட் ஏர் (Oppo Pad Air) ஆனது ரூ.20,000 குள் தான் வாங்க கிடக்கிறது மற்றும் ரியல்மி நிறுவனத்தின் டேப்லெட்கள் கூட பட்ஜெட் விலையில் தான் வாங்க கிடைக்கின்றன, எனவே LG நிறுவனம் அதன் Ultra Tab-ஐ இந்தியாவிற்குள் கொண்டுவரும் பட்சத்தில், அதை ரூ.20,000 க்குள் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை அதே விலைக்கு (ரூ.26,999) கூட அறிமுகம் செய்யலாம் அல்லது அறிமுகம் செய்யாமலே கூட போகலாம்; பொறுத்திருந்து பார்ப்போம்!

Photo Courtesy: LG

Best Mobiles in India

English summary
LG Introduced New Android 12 Tablet with 10 35 inch Display 7040mAh Battery Check Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X