8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி பேட் 5 10.1 என்ற டேப்லெட் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் சில்வர் நிறத்தில் மட்டுமே வெளிவந்துள்ளது.

அசத்தலான டிஸ்பிளே
எல்ஜி ஜி பேட் 5 10.1 சாதனம் பொதுவாக 10.1-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் ஆனது வெளிவந்துள்ளது. குறிப்பாக 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கும் வகையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
இந்த டேப்லெட் சாதனத்தில் 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

மெமரி நீட்டிப்பு ஆதரவு
எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சாதனத்தில் 4ஜிபி LPDDR4 ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரிவசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8எம்பி ரியர் கேமரா
எல்ஜி ஜி பேட் 5 10.1 சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவும் பொறுத்தப்பட்டுள்ளது, பின்புஎல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. எல்ஜி ஜி பேட் 5 10.1 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

8200எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி ஜி பேட் 5 10.1 டேப்லெட் மாடல் 8200எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 3.0 ஆதரவுடன் வெளிவந்துள்ளது,எனவேசார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்று தான் கூறவேண்டும். மேலும் வைஃபை, ஜிபஎஸ், யுஎஸ்பழ டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை,கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications