வா தலைவா வா.. டால்பி அட்மாஸ்.. 10200mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புது Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் இந்தியாவில் லெனோவா யோகா டேப் பிளஸ் (Lenovo Yoga Tab Plus) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த டேப்லெட் மாடலின் வருகையை தற்போது அமேசான் தளம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்டெல் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சாதனத்தின் அம்சங்களைப் பார்க்கலாம்.
லெனோவா யோகா டேப் பிளஸ் அம்சங்கள் (Lenovo Yoga Tab Plus Specifications): 12.7-இன்ச் 3K PureSight Pro டிஸ்பிளே வசதியுடன் இந்த லெனோவா யோகா டேப் பிளஸ் மாடல் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்,100 சதவீதம் டிசிஐ-பி3 கலர் கவரேஜ் உள்ளிட்ட பல சிற்பபான அம்சங்கள் உள்ளன. எனவே இதில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் லெனோவா யோகா டேப் பிளஸ் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்டெல் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய லெனோவா யோகா டேப் பிளஸ் மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
மல்டி-ஜெஸ்டர் டிராக்பேட் (multi-gesture trackpad), 1.5mm கீ டிராவல் மற்றும் Lenovo AI Now க்கான ஷார்ட்கட் கீ ஆகியவற்றைக் கொண்ட 2-இன்-1 கீபோர்டுடன் இந்த டேப்லெட் இந்தியாவில் அறிமுகாகும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியும் இந்த லெனோவா யோகா டேப் பிளஸ் மாடலில் உள்ளது. பின்பு லெனோவோ ஏஐ நோட் (Lenovo AI Note), லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளன. அதேபோல் 640 கிராம் எடை கொண்டுள்ளது இந்த சாதனம்.
குறிப்பாக ஹர்மன்ஃகார்டன் டியூன் செய்த டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் சிஸ்டம் இந்த சாதனத்தில் உள்ளன. அதுவும் இதில் நான்கு வூஃபர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்கள் உள்ளதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் 10200mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளன. எனவே இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப்லெட். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளன. பின்பு வைஃபை 7, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 3.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications