தலைவன் வேற ரகம்.. இரண்டு புதிய டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.. என்ன விலை?
லெனோவா நிறுவனம் IFA 2025 நிகழ்வில் லெனோவா யோகா டேப் (Lenovo Yoga Tab) மற்றும் லெனோவா ஐடியா டேப் பிளஸ் (Lenovo Idea Tab Plus) என இரண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு டேப்லெட் மாடல்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
லெனோவா யோகா டேப் அம்சங்கள்: 11.1-இன்ச் 3.2.கே PureSight Pro ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உடன் லெனோவா யோகா டேப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 3200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. பின்பு 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த புதிய சாதனத்தில் உள்ளது.
13எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் லெனோவா யோகா டேப் மாடல் வெளிவந்துள்ளது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளது. 8860mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த டேப்லெட் வெளிவந்தது.
லெனோவா ஐடியா டேப் பிளஸ் அம்சங்கள்: 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே உடன் லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு 2560 x 1600 பிக்சலஸ், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த பதிய டேப்டெல்.
அதுவும் லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 ஆக்டா-கோர் (MediaTek Dimensity 6400 Octa-Core) சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் இந்த டேப்டெல் மாடலில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
10200mAh பேட்டரி உடன் லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். லூனா கிரே, கிளவுட் கிரே மற்றும் சாண்ட் ரோஸ் நிறங்களில் இந்த புதிய லெனோவா மாடலை வாங்க முடியும்.

13எம்பி செல்பி கேமரா மற்றும் 13எம்பி ரியர் கேமரா வசதி இந்த லெனோவா ஐடியா டேப் பிளஸ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். வைஃபை 5, புளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
விலை:
லெனோவா யோகா டேப் மாடலின் ஆரம்ப விலை 499 € (இந்திய மதிப்பில் ரூ.51,539)-ஆக உள்ளது. பின்பு லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடலின் விலை 299 € (இந்திய மதிப்பில் 30,882) ஆக உள்ளது. விரைவில் இந்த டேப்லெட் மாடல்கள் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








