நீண்ட நாட்களுக்கு பிறகு பட்ஜெட் விலையில் லெனோவோ டேப்லெட் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் தயாரிப்புகள் வெளிவந்த பிறகு லெனோவோ சாதனங்களின் மவுஸ் குறைந்துவிட்டது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் லெனோவோ நீண்ட நாட்களுக்கு பிறகு டேப் வி7 என்ற டேப்லெட் மாடலை இந்தியாவில்
அறிமுகம் செய்துள்ளது.

கச்சிதமான டிஸ்பிளே :
லெனோவோ டேப் வி7 சாதனம் பொதுவாக 6.9-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி:
லெனோவோ டேப் வி7 சாதனத்தில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அம்சம்:
இந்த டேப்லெட் சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:
லெனோவோ டேப் வி7 சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒச சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால்பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் விலை:
இந்த லெனோவோ டேப் வி7 சாதனத்தில் 5180எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
3ஜிபி ரேம் கொண்ட லெனோவோ டேப் வி7 சாதனத்தின் விலை ரூ.12,990-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் கொண்ட லெனோவோ டேப் வி7 சாதனத்தின் விலை ரூ.14,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications