மிரள விடும் Lenovo.. 8600mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. 45W சார்ஜிங்.. அறிமுகமானது புது டேப்லெட்.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா டேப் பிளஸ் (Lenovo Tab Plus) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த டேப்லெட் 11.5-இன்ச் டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர்கள், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது லெனோவா டேப் பிளஸ் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லெனோவா டேப் பிளஸ் அம்சங்கள் (Lenovo Tab Plus specifications): 11.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா டேப் பிளஸ் மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் லெனோவா டேப் பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும். டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு, 8 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (8 JBL speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
8எம்பி ஆட்டோஃபோகஸ் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் பிளஸ் மாடல். பின்பு இந்த கேமரா உதவியுடன் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
8600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பிளஸ் மாடல். எனவே இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வைஃபை 802.11 ஏசி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. பின்பு லூனா கிரே (Luna Gray) நிறத்தில் இந்த லெனோவா டேப் பிளஸ் மாடலை வாங்க முடியும்.
ஆனால் இந்த லெனோவா டேப் பிளஸ் மாடல் தற்போது உலக சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விலை USD 289.99(இந்திய மதிப்பில் ரூ.24,500)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications