Home
Tablets

அதிர போகுது ஆர்டர்.. 45W சார்ஜிங.. LCD டிஸ்பிளே.. அறிமுகமானது Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

லெனோவா நிறுவனம் இந்தியாவில் லெனோவா டேப் பிளஸ் (Lenovo Tab Plus) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது மீடியாடெக் சிப்செட், 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பெரிய டிஸ்பிளே மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

லெனோவா டேப் பிளஸ் அம்சங்கள் (Lenovo Tab Plus specifications): சக்திவாய்ந்த ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது லெனோவா டேப் பிளஸ் மாடல். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதிர போகுது ஆர்டர்.. 45W சார்ஜிங..  அறிமுகமானது Lenovo டேப்லெட்..

லெனோவா டேப் பிளஸ் ஆனது 11.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லெனோவா டேப் பிளஸ் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

லெனோவா டேப் பிளஸ் மாடல் ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும். குறிப்பாக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு, 8 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (8 JBL speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

8எம்பி ஆட்டோஃபோகஸ் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். குறிப்பாக இந்த கேமரா உதவியுடன் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

இந்த லெனோவா டேப் பிளஸ் மாடல் 8600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இது ஒரே சார்ஜில் 12 மணிநேர ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் உள்ளது. 90 நிமிடங்களில் இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்துவிட முடியும்.

வைஃபை 802.11 ஏசி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை ரூ.22,999-ஆக உள்ளது. லெனோவா.காம் மற்றும் Lenovo கடைகளில் இந்த லெனோவா டேப் பிளஸ் மாடலை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab Plus Launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X