Lenovo அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 எனும் புதிய டேப்டெல் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 9 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், 360° சுழற்றக்கூடிய இன்பில்ட் ஸ்டாண்ட், 10200எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 அம்சங்கள்: 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே உடன் லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2,560 x 1,600 பிக்சல்ஸ், டால்பி விஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate), எச்டிஆர் 10, 800 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

இன்பில்ட் கிக்ஸ்டாண்ட் ஆதரவுடன் இந்த புதிய லெனோவா டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ஜேபிஎல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. ஆகவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7400 சிப்செட் (Dimensity 7400 chipset) உடன் லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். வைஃபை 6, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.

உடன் லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த டேப்லெட். ஆகவே இந்த டேப்லெட் மாடலை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். செலஸ்டியல் ஒயிட் நிறத்தில் இந்த சாதனத்தை வாங்கலாம்.
லெனோவா டேப் பிளஸ் ஜென் 2 மாடலின் விலை $400 (இந்திய மதிப்பில் ரூ.38000)-ஆக உள்ளது. தற்போது இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த டேப்லெட் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.


Click it and Unblock the Notifications