Home
Tablets

ஒரே போடு.. 10200mAh பேட்டரி டேப்லெட்.. JBL ஸ்பீக்கர்.. 3K டிஸ்பிளே வேற.. எந்த மாடல்?

லெனோவா நிறுவனத்தின் லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) மற்றும் லெனோவா டேப் பி12 5ஜி (Lenovo Tab P12 5G) டேப்லெட்கள், பிரம்மாண்ட பேட்டரி பேக் கொண்டிருக்கின்றன. இவற்றின் முழு அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் இதோ.

ஒரு லேப்டாப் வாங்குவதற்கு 2 டேப்லெட்களை வாங்கிவிடலாம் என்று திட்டம் போடும் அளவுக்கு இப்போது வரும் டேப்லெட்களில் அவ்வளவு அம்சங்கள் இருக்கின்றன. இவற்றில், சில டேப்லெட்களில் வரும் குறைவான பேட்டரி பேக்கப் பலரை கடுப்பாக்கியிருக்காலம். ஆனால், லெனோவாவின் லெனோவா டேப் பி12 டேப்லெட் 10200mAh பேட்டரி மட்டுமல்லாமல், 3K டிஸ்பிளே, 8ஜிபி ரேம், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் போன்ற அசத்தலான அம்சங்களுடன் வருகிறது.

ஒரே போடு.. 10200mAh பேட்டரி டேப்லெட்.. JBL ஸ்பீக்கர் வேற.. எந்த மாடல்?

லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 Specifications): இந்த டேப்லெட் 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா மற்றும் பிளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்பி பேக் கேமரா வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050) வருகிறது. 4 ஜிபி ரேம் +128 மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 3 வேரியண்ட்கள் இருக்கிறது.

மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. 10200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பிளேபேக் கிடைக்கும். மேலும், பிங்கர்பிரிண்ட் சென்சார், பவர் கீ, ப்ளூடூத் வி5.1, டைப் - சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோர்ம் கிரே (Storm Grey) மற்றும் ஓட் (Oat) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

லெனோவா டேப் பி12 5ஜி அம்சங்கள் (Lenovo Tab P12 5G Specifications): இந்த டேப்லெட் 10.61 இன்ச் (1200×2000) 2K டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 1 மைக், 2 ஸ்பீக்கர்கள், 3 மிமீ ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

8 எம்பி செல்பீ கேமரா + 13 எம்பி மெயின் கேமரா வருகிறது. 7,700mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரம் வீடியோ பிளேபேக் கிடைக்கும். ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 695 (Snapdragon 695) என்னும் 5ஜி சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் வருகிறது. அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. மேலும், டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, டைப் - சி போர்ட், நானோ சிம் கார்டு போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லெட் அபைஸ் ப்ளூ (Abyss Blue) கலரில் விற்பனைக்கு வரவிருக்கிறது. லெனோவா டேப் பி12 மாடலின் விலை ரூ.45,405ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு கீபோர்ட் மற்றும் லெனோவோ டேப் பென் பிளஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இதில் கீபோர்ட் வேண்டாம் என்றால், ரூ.36,305க்கு வாங்கிக்கொள்ள முடியும். அதேபோல லெனோவா டேப் பி12 5ஜி மாடலின் விலை ரூ.36,306ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வருகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab P12 With Dimensity 7050 Chip, 10200mAh Battery, Specifications Price Sales Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X