Home
Tablets

செப்.5 க்கு அப்புறம்.. ஆர்டர் அனல் பறக்கும்.. மிட்-ரேஞ்ச் விலை.. 10200mAh பேட்டரி.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?

ஒரு லேப்டாப்புக்கு நிகரான 240Hz டச் சாம்பிளிங் ரேட் டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 1டிபி மெமரி சப்போர்ட், ஆர்ஜிபி கேமரா, 10200mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) டேப்லெட் மிட்-ரேஞ்ச் விலையில் விற்பனைக்கு வருகிறது.

இப்போது, மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கும் லேப்டாப்களின் பெரும்பாலான அம்சங்கள் டேப்லெட்டிலேயே வந்து விடுகின்றன. குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களை எடுக்கவும், அலுவலகம் சார்ந்த பணிகளை முடிக்கவும் பலருக்கு லேப்டாப்பைவிட டேப்லெட்களே மிகுந்த வசதியாக இருக்கின்றன. இதனால், அதுதொடர்பான வியாபாரமும் பெருகிவிட்டது.

ஆர்டர் அனல் பறக்கும்.. மிட்-ரேஞ்ச் விலையில் 10200mAh பேட்டரி டேப்லெட்!

ஆகவே, டேப்லெட் தயாரிப்பு நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் நல்ல நல்ல அம்சங்களை கொண்ட டேப்லெட்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், லேனோவா (Lenovo) நிறுவனத்தின் லெனோவா டேப் பி12 டேப்லெட் மிட்-ரேஞ்ச் விலையில் பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனாவில் விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால், மற்ற நாடுகளிலும் விற்பனை செய்ய லெனோவா நிறுவனம் திட்டமிட்டது. இந்த அம்சங்களை பார்த்த இந்திய வாடிக்கையாளர்கள் எப்போது, அந்த டேப்லெட் இங்கு விற்பனைக்கு வரும் என்று காத்துக்கொண்டிருந்தனர். இந்த சூழலில், லெனோவா டேப் பி12 டேப்லெட்டின் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு அம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்கள் பின்வருமாறு.

லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 Specifications): இந்த டேப்லெட் 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்டிபிஎஸ் எல்சிடி (LTPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் ப்ரீ ஓஎஸ் அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 (MediaTek Dimensity 7050) சிப்செட் வருகிறது. இந்த டேப்லெட் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்டுள்ளது.

அதோடு 1 டிபி மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டில் 13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆர்ஜிபி (RGB) சப்போர்ட் உள்ளது. அதோடு பிளாஷ் லைட்டுடன் கூடிய 8 எம்பி பேக் கேமரா வருகிறது.

20W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல்சார்ஜ் செய்தால், தொடர்ந்து 10 மணி நேர வீடியோ பிளேபேக் கொடுக்கும். மேலும், பவர் கீ பிங்கர்பிரிண்ட் சென்சார் (Power Key Fingerprint Sensor), குவாட் ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (Quad JBL Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1), டைப் - சி ஆடியோ (Type-C audio) உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லெனோவா டேப்லெட் ஓட் (Oat) மற்றும் ஸ்டோர்ம் கிரே (Storm Grey) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த டேப்லெட்டை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் லெனோவா ஸ்டோர் (Lenovo Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.34,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதைவிட கம்மியான பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை தொடங்குகிறது. ஒரு லேப்டாப்புக்கு நிகரான அம்சங்களை கொண்ட டேப்லெட் வாங்க வேண்டும் என்றால், இந்த லேனோவா டேப் பி 12 டேப்லெட் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab P12 With 10200mAh Battery, Dimensity 7050 Sale From September 5 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X