Home
Tablets

அசூர விற்பனை.. முழுசா ரூ.3,000 டிஸ்கவுண்ட்.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 10200mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) பிரம்மாண்ட டிஸ்கவுண்ட் பெற்று அறக்க பறக்க விற்பனையாகி வரும் லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) டேப்லெட்டின் முழு அம்சங்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.

லெனோவா டேப் பி12 அம்சங்கள் (Lenovo Tab P12 Specifications): இந்த லெனோவா டேப்லெட் 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு எல்டிபிஎஸ் (LTPS) மாடலாகும். இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.3000 தள்ளுபடி.. 8GB ரேம்.. 1TB மெமரி.. 10200mAh பேட்டரி டேப்லெட்!

அதோடு 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல், டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் கொண்டுள்ளது. அதோடு 2 ஆண்டுகள் ப்ரீ ஓஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.

இந்த மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 எஸ்ஓசி (MediaTek Dimensity 7050 SoC) சிப்செட் மற்றும் மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது.

அதேபோல ஆர்ஜிபி (RGB) சென்சார் சப்போர்ட் கொண்ட 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லெனோவோ டேப்லெட்டில் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. அதோடு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த டேப் பி12 மாடலில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10200mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரி ஒரு ஃபுல்சார்ஜில் தொடர்ந்து 10 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கொடுக்கக்கூடியது.

இந்த டேப்லெட் பிரீமியம் மெட்டாலிக் பாடி கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 615 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல 6.9 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. இந்த பி12 டேப்லெட் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் கனெக்டிவிட்டி பார்க்கையில், வை-பை 6 (Wi-Fi 6 ), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் டைப் - சி ஆடியோ (Type-C Audio) ஆகியவை வருகின்றன.

இந்த லெனோவா டேப்லெட்டில் ஸ்டோர்ம் கிரே (Storm Grey) மற்றும் ஓட் (Oat) ஆகிய 2 கலர்கள் வருகின்றன. இந்த டேப்லெட் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனைக்கு முன்னிட்டு முழுதாக ரூ.3,000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இந்த டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டை (SBI Bank Credit Card) பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். நல்ல விலையில் 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், குவாட் ஸ்பீக்கர்கள், 10200mAh பேட்டரி போன்ற பிரீமியம் அம்சங்கள் வேண்டுமானால், லெனோவா டேப் பி12 மாடலை தேர்வு செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab P12 Under Rs 25000 With Offer in Amazon Great Indian Festival Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X