நீண்ட இடைவெளிக்குப் பிறகு லெனோவா அறிமுகம் செய்த புதிய டேப்லெட்! என்ன விலை? எப்படி இருக்கு?
லெனோவா நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு அதிகமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது வந்தது. ஆனால் இந்நிறுவனம் இப்போது ஒரு சில சாதனங்களை மட்டுமே அறிமுகம் செய்கிறது. ஆனாலும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் புதிய சாதனங்கள் வெளிவருகிறது. அதன்படி இப்போது ஒரு புதிய டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது லெனோவா.

லெனோவா பி12 ப்ரோ டேப்லெட்
அதாவது லெனோவா நிறுவனம் தற்போது லெனோவா பி12 ப்ரோ எனும் டேப்லெட் மாடலைத் தான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சிறந்த
டிஸ்பிளே வசதி, தனித்துவமான சிப்செட், அசத்தலான கேமராக்கள் என பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லெனோவா பி12 ப்ரோ மாடல்வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே
லெனோவா பி12 ப்ரோ 5ஜி சாதனம் ஆனது 12.6-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி விஷன், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் இந்த புதிய லெனோவா பி12 ப்ரோ 5ஜி சாதனம்.

கேமிங் வசதிக்கு தகுந்த சிப்செட்
குறிப்பாக இந்த புதிய லெனோவா பி12 ப்ரோ 5ஜி மாடல் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவைக் கொண்டுள்ளது. இது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கும். அதேபோல் இந்த புதிய டேப்லெட் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங், எடிட்டிங் போன்ற அனைத்து வசதிகளுக்கும் தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு
8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி யுஎப்எஸ் 3.1 உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு இந்த புதிய லெனோவா பி12 ப்ரோ 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் மைகரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்த லெனோவா நிறுவனம்.

சூப்பர் கேமரா
லெனோவா பி12 ப்ரோ 5ஜி சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த லெனோவா பி12 ப்ரோ 5ஜி மாடல்.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
லெனோவா பி12 ப்ரோ 5ஜி சாதனத்தில் 10,200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் போன்ற பல அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான டேப்லெட் மாடல்.

மெலிதான வடிவமைப்பு
இந்த புதிய லெனோவா சாதனம் 565 கிராம் எடை கொண்டது. பின்பு சாம்பல் நிறத்தில் மட்டுமே தற்போது லெனோவா பி12 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய டேப்லெட்டில் ஜேபிஎல் டியூன் செய்யப்பட்ட நான்கு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.

வியக்கவைக்கும் விலை
வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், மிராகாஸ்ட் போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய லெனோவா பி12 ப்ரோ 5ஜி சாதனம். குறிப்பாகஇந்த டேப்லெட் சாதனத்தின் அம்சங்கள் அருமையாக தான் உள்ளன. ஆனால் இதன் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது. அதாவது இந்த லெனோவா பி12 ப்ரோ 5ஜி சாதனத்தை ரூ.69,999-விலையில் அமேசான்,லெனோவா.காம் தளங்களில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications