பிப்ரவரி 12: இந்தியாவில் அறிமுகமாகும் லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட்.!

|

லெனோவா நிறுவனம் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2560 x 1600 பிக்சல் தீர்மானம்

2560 x 1600 பிக்சல் தீர்மானம்

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் ஆனது 11.5-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 2560 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 500nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

இந்த புதிய டேப்லெட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
இடம்பெறுவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மலிவு விலையில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?மலிவு விலையில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

 13எம்பி பிரைமரி லென்ஸ்

13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த டேப்லெட் மாடலின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புத்தம் புதிய சாதனம்.

 டேப்லெட் மாடலில் 8600

லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலில் 8600 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும். மேலும் ஒரு சிம் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இருப்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் ம

அதேபோல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது புதிய டேப்லெட் மாடல்.

ஜேபிஎஸ் ஸ்பீக்கர்கள்

ஜேபிஎஸ் ஸ்பீக்கர்கள்

வெளிவந்த தகவலின்படி லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலில் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். மேலும் இந்த சாதனம் ரூ.61,000-விலையில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Lenovo Tab P11 Pro with 13 Mega Pixel Camera Launching in India on February 12: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X