வியக்க வைக்கும் விலையில் லெனோவா டேப் பி11 ப்ரோ அறிமுகம்.!
இந்தியாவில் புதிய லெனோவா டேப் பி11 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் லெனோவா டேப் பி11 ப்ரோ அறிமுக சலுகையாக ரூ.44,999-விலையில் வாங்க முடியும். ஆனால் இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.49,999-ஆக உள்ளது. இப்போது லெனோவா டேப் பி11 ப்ரோ சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

லெனோவா டேப் பி11 ப்ரோ மாடல் ஆனது 11.5-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 2560 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 500nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.
இந்த புதிய டேப்லெட் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெறுவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.
இந்த டேப்லெட் மாடலின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புத்தம் புதிய சாதனம்.

லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலில் 8600 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும். மேலும்ஒரு சிம் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இருப்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.
அதேபோல் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது புதிய டேப்லெட் மாடல்.

வெளிவந்த தகவலின்படி லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலில் ஜேபிஎஸ் ஸ்பீக்கர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications