iPad தோத்துடும் போலயே.! Lenovo Tab P11 Pro பாக்க செமயா இருக்கு.. ஆனா ரேட் தான் கொஞ்சம்.!

|

பார்த்தவுடன், இது Apple iPad Air தானே.! என்று கூறும் அளவிற்கு லெனோவா (Lenovo) நிறுவனத்தின் இந்த புதிய டேப்லெட் டிவைஸின் தோற்றம் அமைந்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், இந்த புதிய Lenovo Tab P11 Pro (2nd Gen) மாடலை பார்த்தவுடன், உங்களையே அறியாமல் இந்த டிவைஸை ரசிக்கத் துவங்கிவிடுவீர்கள்.

சிறப்பம்சம்

அப்படி, ஐ கேட்சிங் (eye catching) வடிவமைப்பை இந்த டேப்லெட் சாதனம் பெற்றுள்ளது. சரி, இந்த Lenovo Tab P11 Pro (2nd Gen) மாடல் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

 லெனோவா டேப் 11 ப்ரோ (2வது ஜென்)

லெனோவா டேப் 11 ப்ரோ (2வது ஜென்)

லெனோவா நிறுவனம் புதிய பிரீமியம் ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடலை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் Lenovo Tab P11 மற்றும் Lenovo Tab P11 Plus போன்ற மாடங்களுக்கு மேல் இருக்கும் அம்சங்களுடன் இந்த புதிய Lenovo Tab P11 Pro (2nd Gen) சாதனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய லெனோவா டேப் 11 ப்ரோ (2வது ஜென்) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவா டேப் பி11 ப்ரோவை விட மேம்படுத்தப்பட்டது.

10 விநாடியில் பணம்.. Mobile Loan Apps இல் கடன் வாங்கலாமா? எது பெஸ்ட்?10 விநாடியில் பணம்.. Mobile Loan Apps இல் கடன் வாங்கலாமா? எது பெஸ்ட்?

MediaTek Kompanio 1300T சிப்செட்

MediaTek Kompanio 1300T சிப்செட்

இந்த புதிய Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட் டிவைஸ் புதிய MediaTek Kompanio 1300T சிப்செட் உடன் வருகிறது. இந்த டேப்லெட்டில் ஒருங்கிணைந்த ARM Mali-G77 MC9 GPU வழங்கப்பட்டுள்ளது. Lenovo டேப்லெட் Samsung Galaxy Tab S7 FE மற்றும் Apple iPad Air போன்றவற்றுக்கு எதிராகப் போட்டியிடுகிறது. இந்தியாவில் இந்த புதிய Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட் சாதனம் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதை எப்போதிலிருந்து வாங்கலாம் என்று பார்க்கலாம்.

Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட்டின் விலை

Lenovo Tab P11 Pro (2nd Gen) டேப்லெட்டின் விலை

Lenovo Tab P11 Pro (2nd Gen) இந்தியாவில் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 8ஜிபி ரேம் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டின் விலை ரூ. 39,999 ஆகும். இதன் முன்னோடி மாடலான அசல் Tab P11 Pro மாடலின் விலை இந்திய இணையதளத்தில் ரூ. 36,999 ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அக்டோபர் 17 ஆம் தேதி முதல், Amazon.in மற்றும் Lenovo நிறுவனத்தின் பிரத்தியேக கடைகள் வழியாக Lenovo Tab P11 Pro (2nd Gen) வாங்கக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Lenovo Tab P11 Pro (2nd Gen) சிறப்பம்சம்

Lenovo Tab P11 Pro (2nd Gen) சிறப்பம்சம்

புதிய இரண்டாம் தலைமுறை Lenovo Tab P11 Pro மாடல் அதன் முன்னோடிகளை விடப் பல மேம்படுத்தல்களுடன் வருகிறது. இது ஒரு புதிய MediaTek Kompanio 1300T சிப்செட் இன் கீழ் இயங்குகிறது. இந்த டேப்லெட் 8,200mAh பேட்டரியை கொண்டுள்ளது. முதல் தலைமுறை மாடலில் காணப்படும் 8400mAh பேட்டரி பேக்கை விட இது சற்று சிறியது என்றாலும் நீடித்து நிலைக்கும் அப்டேட்டை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று லெனோவா கூறியுள்ளது.

120Hz ரெப்ரெஷ் ரேட்

அசல் Lenovo Tab P11 Pro மாடலுடன் ஒப்பிடும்போது OLED டிஸ்ப்ளே 11.2' இன்ச் சற்று சிறியதாக உள்ளது. இருப்பினும், இது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதம், 600 nits பீக் பிரைட்னஸ் Dolby Vision HDR மற்றும் HDR10+ ஆதரவு போன்ற பல அம்சங்களைப் பெறுகிறது. இந்த டேப்லெட் Lenovo Precision Pen 3 ஆதரவுடன் இது வருகிறது. இது 13MP பின்புற கேமரா மற்றும் 8MP முன் கேமராவை கொண்டுள்ளது.

அக்டோபர் 17

அக்டோபர் 17

இந்த டேப்லெட் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட்-ஸ்பீக்கர் அமைப்பையும் வழங்குகிறது. இது 263.66 x 166.67 x 6.8 மிமீ மற்றும் 480 கிராம் தடிமன் கொண்டது. இறுதியாக Lenovo Tab P11 Pro (2nd Gen) ஆனது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. iPad வாங்க முடியாதவர்கள், தாராளமாக இந்த Lenovo Tab P11 Pro (2nd Gen) சாதனத்தை வாங்கலாம். அக்டோபர் 17 ஆம் தேதியை மறந்துவிடாதீர்கள். அன்று தான் இந்த டேப்லெட் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
Lenovo Tab P11 Pro (2nd Gen) launched in India Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X