Home
Tablets

ஆடிப் போவீங்க.. 7700 எம்ஏஎச் பேட்டரி.. கம்மி விலை.. வருகிறது புது லெனோவா டேப்லெட்.. எந்த மாடல்?

லெனோவா நிறுவனம் மலிவு விலையில் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக லெனோவா நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டேப்லெட் மாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லெனோவா விரைவில் ஒரு அசத்தலான டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதாவது லெனோவா நிறுவனம் லெனோவா டேப் எம்11 மாடலை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய லெனோவா டேப் எம்11 ஆனது மலிவு விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த லெனோவா டேப் எம்11 மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

7700 எம்ஏஎச் பேட்டரி.. கம்மி விலை.. வருகிறது புது லெனோவா  டேப்லெட்...

லெனோவா டேப் எம்11 ஆனது 11-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,920 x 1,200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

அதேபோல் லெனோவா டேப் எம்11 மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜி மெமரி என்ற இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த டேப்லெட். பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லெனோவா டேப் எம்11 வெளிவரும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். மேலும் சிங்கிள் ரியர் கேமரா, 7700 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் விரைவில் லெனோவா டேப் எம்11 அறிமுகமாகும். தற்போது இந்த டேப்லெட் மாடலின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. விரைவில் இந்த டேப்லெட் மாடலின் அனைத்து அம்சங்களும் வெளியாகும்

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்த லெனோவா டேப் எம்9 மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம். லெனோவா டேப் எம்9 மாடல் ஆனது 9-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1340 x 800 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லெனோவா டேப் எம்9 மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-5ஜி2 ஜிபியு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இதில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 வசதியைக் கொண்டுள்ளது.

லெனோவா டேப் எம்9 மாடல் ஆனது 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கொண்டுள்ளது இந்த டேப்லெட். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த டேப்லெட் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம். பின்பு டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது.

8எம்பி ரியர் கேமராவுடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி ரியர் கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 2எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

7700 எம்ஏஎச் பேட்டரி.. கம்மி விலை.. வருகிறது புது லெனோவா  டேப்லெட்...

5100 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது 13 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்கும். பின்பு இதில் 18 மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகிறது. அதேபோல் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடன் இந்த அசத்தலான லெனோவா டேப்லெட் வெளிவந்துள்ளது.

4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது. ப்ளூ மற்றும் ஸ்டார்ம் கிரே நிறங்களில் இந்த டேப்லெட் கிடைக்கும்.

photo courtesy: windows report

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M11 with MediaTek Helio G88 SoC to launch soon : check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X