மார்ச் 26 உறுதி.. 11 இன்ச் டிஸ்பிளே.. 13எம்பி கேமரா.. 8ஜிபி ரேம்.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா டேப் எம்11 எனும் டேப்லெட் மாடலை வரும் மார்ச் 26-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதேபோல் சிங்கிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே, குறைவான எடை பல சிறப்பான அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இப்போது லெனோவா டேப் எம்11 மாடலி அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

லெனோவா டேப் எம்11 அம்சங்கள் (Lenovo Tab M11 specifications): தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் (MediaTek Helio G88 SoC)உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவரும். மேலும் இதில் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்11 மாடல் அறிமுகம் செய்யப்படும். ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 15
வரை அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.
குறிப்பாக லெனோவா டேப் எம்11 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் எம்11 மாடல். நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்11 மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த மாடலில் உள்ளன.
லெனோவா டேப் எம்11 சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்டெல் மாடல் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. பின்பு இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்
இந்த லெனோவா டேப் எம்11 மாடல் 11-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன்அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளேவில்90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், Netflix HD சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.
எனவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & splash Resistant) வசதி கொண்டுள்ளது லெனோவா டேப் எம்11 மாடல். அதேபோல் டால்பி அட்மாஸ் ( Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
ப்ளூடூத் 5.1, வைஃபை 802.11ஏசி, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. குறிப்பாக 465 கிராம் எடையில் இந்த புதிய லெனோவா டேப் எம்11 மாடல் வெளிவரும். அதேபோல் இந்தியாவில் லெனோவா டேப் எம்11 ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








