அமேசான் அதிர போகுது.. 7040mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. வருகிறது Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா டேப் எம்11 எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் ஆனது அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் லெனோவா டேப் எம்11 மாடலின் அறிமுகம் குறித்த தகவல்கள் மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
லெனோவா டேப் எம்11 அம்சங்கள் (Lenovo Tab M11 specifications): 11-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்11 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், Netflix HD சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக லெனோவா டேப் எம்11 மாடல் ஆனது சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் (MediaTek Helio G88 SoC) வசதியுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட்.குறிப்பாக மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நமபி வாங்கலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் லெனோவா டேப் எம்11 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் எம்11 மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
லெனோவா டேப் எம்11 ஆது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளிவரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 (Android 15) வரை தடையில்லாத அப்டேட்டை பெரும் என்றும், அதேபோல், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேடுகளை பெரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.
7040எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் லெனோவா டேப் எம்11 மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங வசதியும் உள்ளது. IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & splash Resistant) கொண்டிருக்கிறது இந்த டேப்லெட்.

லெனோவா டேப் எம்11 மாடல் ஆனது 465 கிராம் எடையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த லெனோவா டேப்லெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த லெனோவா டேப் எம்11 மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
எப்போது அறிமுகம்? தற்போது லெனோவா டேப் எம்11 மாடல் அமேசான் (Amazon) இந்தியா மைக்ரோசைட் தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் டீசர் கூட வெளியிடப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் இந்த லெனோவா டேப் எம்11 மாடல் மாடல் இந்தியாவில் அறிமுகமாகும். அதுவும் இந்த புதிய டேப்லெட் ரூ.15,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








