Home
Tablets

பட்டைய கிளப்பிய லெனோவா.. பட்ஜெட் விலை.. 7040mAh பேட்டரி.. 128GB மெமரி.. 13MP கேமரா.. எந்த மாடல்?

லெனோவா நிறுவனம் இன்று புதிய லெனோவா டேப் எம்11 எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது லெனோவா டேப் எம்11 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

லெனோவா டேப் எம்11 அம்சங்கள் (Lenovo Tab M11 specifications): 11-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் லெனோவா டேப் எம்11 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், Netflix HD சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டேப்லெட் மாடலின் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

பட்டைய கிளப்பிய லெனோவா.. பட்ஜெட் விலை.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?

லெனோவா டேப் எம்11 மாடல் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் (MediaTek Helio G88 SoC)உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். இதுதவிர மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நமபி வாங்கலாம். குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.

அதேபோல் லெனோவா டேப் எம்11 மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் எம்11 மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் லெனோவா டேப் எம்11 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 (Android 15) வரை தடையில்லாத அப்டேட்டை பெரும் என்றும், அதேபோல், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேடுகளை பெரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

13எம்பி சிங்கிள் ரியர் கேமரா உடன் லெனோவா டேப் எம்11 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இதன் ரியர் கேமரா ஆட்டோபோகஸ், 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டு இந்த லெனோவா டேப்லெட் வெளிவந்துள்ளது. இதன் செல்பி கேமராவும் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்யும்.

லெனோவா டேப் எம்11 மாடல் ஆனது 7040எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங வசதியும் உள்ளது. IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & splash Resistant) கொண்டிருக்கிறது இந்த டேப்லெட்.

பட்டைய கிளப்பிய லெனோவா.. பட்ஜெட் விலை.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?

டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவுடன் கூடிய குவாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. பின்பு ஃபேஸ் அன்லாக் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

லெனோவா டேப் எம்11 மாடல் ஆனது 465 கிராம் எடையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. அமேசான் மற்றும் லெனோவா ஸ்டோர் மூலம் இந்த டேப்லெட் மாடலை முன்பதிவு செய்ய முடியும். குறிப்பாக லூனா கிரே (Luna Grey), சீஃபோம் கிரீன் (Seafoam Green) நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M11 Launched in India: check specifications, price, Colours
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X