மார்க்கெட்டே அதிர போகுது.. டால்பி ஆடியோ.. 13MP கேமரா.. கம்மி பட்ஜெட்ல Lenovo 5ஜி டேப்லெட் ரெடி.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை கம்மி பட்ஜெட்டில் அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றர். இந்நிலையில் லெனோவா நிறுவனம் விரைவில் புதிய டேப்டெல் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது லெனோவா நிறுவனம் விரைவில் லெனோவா டேப் 10ஏ 5ஜி எனும் டேப்லெட் மாடலை தான் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் ஆனது கூகுள் பிளே கன்சோல் தளத்தில் LET02 எனும் மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த டேப்லெட் அறிமுகமாகும். மேலும் கூகுள் பிளே கன்சோல் தளத்தில் வெளியான இந்த டேப்லெட் மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

லெனோவா டேப் 10ஏ 5ஜி அம்சங்கள்: 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் 2000 x 1200 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 613 ஜிபுயு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 13எம்பி கேமரா உடன் லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உடன் இந்த லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். பின்பு நானோ-சிம் ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல். குறிப்பாக தனித்துவமான வடிவமைப்புடன் இந்த டேப்லெட் அறிமுகமாகும்.
அதேபோல் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் வெளிவரும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன் கனெக்விட்டி ஆதரவுகளுடன் லெனோவா டேப் 10ஏ 5ஜி மாடல் அறிமுகமாகும். குறிப்பாக இந்த புதிய லெனோவா டேப்டெல் ஆனது இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications