Home
Tablets

குறைந்த விலையில் 5ஜி டேப்லெட் வாங்க சரியான நேரம்.. டால்பி அட்மாஸ்.. 7700mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இன்று நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த லெனோவா டேப் எம்10 5ஜி (Lenovo Tab M10 5G) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் டால்பி அட்மாஸ், ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு 62 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இப்போது இந்த டேப்லெட் மாடலை 15999 விலையில் வாங்கிவிட முடியும்.

குறைந்த விலையில் 5ஜி டேப்லெட் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

லெனோவா டேப் எம்10 5ஜி அம்சங்கள் (Lenovo Tab M10 5G Specifications): 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். 90Hz ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதியுடன் வெளிவந்தது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. அதுவும் கேமிங் ஆப்ஸ்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள்1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டேப்லெட் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speaker) உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

குறைந்த விலையில் 5ஜி டேப்லெட் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

7700mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி டேப்லெட். டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) பெற்றுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M10 5G with 6GB RAM price slashed on Amazon Sale: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X