Home
Tablets

காதலர் தினம்.. அமேசான் வழங்கும் இந்த ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க.. கம்மி விலையில் 5ஜி டேப்லெட்..

இந்த காதலர் தினத்தில் உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஒரு நல்ல 5ஜி டேப்லெட் வாங்க விருப்பம் இருக்கிறதா. அப்போ அமேசான் வழங்கும் இந்த டேப்லெட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க.. அதாவது அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த டேப்லெட் ரூ.22899 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்போது அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை தற்போது ரூ.17,999 விலையில் வாங்கிவிட முடியும்.

காதலர் தினம்.. அமேசான் வழங்கும் இந்த ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க..

லெனோவா டேப் எம்10 5ஜி அம்சங்கள் (Lenovo Tab M10 5G Specifications): 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி .90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இது வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speaker) உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம்.

13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

7700mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அதேபோல் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) பெற்றுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி. இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. குறிப்பாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி டேப்லெட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Tab M10 5G with 6gb ram price slashed on amazon check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X