5ஜி டேப்லெட் வாங்கலாம்.. எல்லாரும் ஓடியாங்க ஓடியாங்க! பட்ஜெட் விலை.! அட்டகாசம் செய்த Lenovo.!
லெனோவா நிறுவனம் இந்தியாவில் புதிய 5ஜி டேப்லெட் மாடலை இன்று (14-7-2023) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக லெனோவா டேப் எம்10 5ஜி(Lenovo Tab M10 5G) என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய லெனோவா டேப் எம்10 5ஜி ஆனது வரும் ஜூலை 15 முதல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் லெனோவா.காம் தளத்தில் கூட இந்த சாதனத்தை வாங்க முடியும். இப்போது லெனோவா டேப் எம்10 5ஜி மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

10.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். பின்பு 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
குவால்காம் ஸ்னாப்ராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த சாதனம் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் தான் மிகவும் சக்திவாய்ந்தது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா டேப்லெட்.
லெனோவா டேப் எம்10 5ஜி ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். மேலும் இதில் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த டேப்டெல் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

7700 எம்எஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.
அதேபோல் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த புதிய லெனோவா டேப்லெட். மேலும் லெனோவா டேப் எம்10 5ஜி மாடலின் ஆரம்ப விலை ரூ.24,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்தியாவில் இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








