இந்தியாவில் லெனோவா அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10.1-இன்ச் டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா டேப் (Lenovo Tab) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 4ஜி எல்டிஇ ஆப்ஷன், 10.1-இன்ச் டிஸ்பிளே மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது லெனோவா டேப் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லெனோவா டேப் அம்சங்கள்: 10.1-இன்ச் WUXGA எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் லெனோவா டேப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 400 நிட்ஸ் பீக் பிரைடன்ஸ், 72 சதவீதம் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut), 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளெ உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிபசெட் உடன் லெனோவா டேப் மாடல் அறிமுகமானது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆர்ம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு (ARM Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லெனோவா டேப் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த லெனோவா டேப்லெட் மாடலில் உள்ளது.
8எம்பி ரியர் கேமரா உடன் புதிய லெனோவா டேப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய லெனோவா டேப் மாடலின் எடை 425 கிராம் ஆகும்.
ZUI 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் லெனோவா டேப் மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உடன் புதிய லெனோவா டேப் வெளிவந்துள்ளது.

5100mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் மாடல். குறிப்பாக இந்த பேட்டரி நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் ஆதரவும் உள்ளது. 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளன.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட லெனோவா டேப் (Wi-Fi version) மாடலின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட (Wi-Fi version) மாடலின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட (Wi-Fi + LTE version) மாடலின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. அமேசான் மற்றும் லெனோவா இந்தியா தளங்களில் இந்த புதிய சாதனத்தை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








