அதகளம் பண்ணும் Lenovo.. 8600mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. அறிமுகமானது புது டேப்லெட்.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது லெனோவா டேப் கே11 பிளஸ் (Lenovo Tab K11 Plus) எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய லெனோவா டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது லெனோவா டேப் கே 11 பிளஸ் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லெனோவா டேப் கே11 பிளஸ் அம்சங்கள் (Lenovo Tab K11 Plus Specifications): 11.45-இன்ச் 2கே ரெசல்யூஷன் (2K resolution) ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த லேனோவா டேப்லெட். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (400 nits of peak brightness) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம் +64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் லெனோவா டேப் கே11 பிளஸ் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 (Snapdragon 680) சிப்செட் வசதியுடன் இந்த லெனோவா டேப் கே11 பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு லெனோவா டேப் கே11 பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 13 மெகாபிக்சல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா டேப் கே11 பிளஸ் மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 4 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் கே11 பிளஸ் மாடல். மேலும் டூயல் மைக்ரோபோன்கள் (microphones) கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா டேப் கே11 பிளஸ் மாடல். கைரோஸ்கோப் சென்சார், ஹால் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதிகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

8600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் கே11 பிளஸ் மாடல். எனவே இந்த டேப்லெட் நீண்டநேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. வைஃபை 6, புளூடூத் 5., 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
அதேபோல் லெனோவா டேப் கே11 பிளஸ் மாடல் தற்போது உலக சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்டெல் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலையை வெளியிடவில்லை. கூடிய விரைவில் இந்த டேப்லெட் விலை வெளியிடப்படும்.
Photo courtesy: thetechoutlook


Click it and Unblock the Notifications








