Home
Tablets

10.3-இன்ச் டிஸ்பிளேவுடன் லெனோவா டேப் 6 5ஜி மாடல் அறிமுகம்.!

லெனோவா நிறுவனம் ஜப்பானில் புதிய லெனோவா டேப் 6 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட் மாடல் அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது லெனோவா டேப் 6 5ஜி மாடலின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

லெனோவா டேப் 6 5ஜி

லெனோவா டேப் 6 5ஜி மாடல் ஆனது 10.3-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,200x1,920 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

லெனோவா டேப் 6 5ஜி

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 690 5ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் அருமையாக பயன்படும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சிப்செட் மிக வேகமாக பயன்படும்.

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 8எம்பி ரியர்

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் பல்வேறு அசத்தலான கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Abyss Blue மற்றும் Moon White நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய டேப்லெட்.

4ஜிபி ரேம் மற்றும்

லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 7500 எம்ஏஎச் பேட்டரி

இந்த லெனோவா டேப் 6 5ஜி மாடலில் 7500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில்வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்

ப்ளூடூத் வி5.1, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் 6 5ஜி மாடல். குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட் வசதியுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த லெனோவா டேப் 6 5ஜி மாடல்.

Best Mobiles in India

English summary
Lenovo Tab 6 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X