விரைவில் : 7000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் லெனோவா மோட்டோ டேப்.!
லெனோவா மோட்டோ டேப்லெட் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.
லெனோவா மற்றும் மோட்டோரோலா இணைந்து புதிய டேப்லெட் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்படி வரும் நவம்பர் 17-ம் தேதி லெனோவா மோட்டோ டேப் மாடலை அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அறிமுகப்படுத்தப்படும் லெனோவா மோட்டோ டேப் பொறுத்தவரை நவம்பர் 17-ம் தேதி அமெரிக்காவில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த டேப்லேட் மாடல். லெனோவா மோட்டோ டேப் விளம்பர வீடியோ தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

10.1-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 10.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் பல இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டால்பி அட்மோஸ்:
இந்த லெனோவா மோட்டோ டேப்லெட் பொதுவாக டால்பி அட்மோஸ் உடன் இரண்டு ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் சிறந்த
ஒலி அமைப்பை கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

கைரேகை ஸ்கேனர்:
லெனோவா மோட்டோ டேப்லெட் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர், டிவி ஆப், (AT & T DIRECTV மற்றும் பிற வீடியோ ஆப்) மற்றும் கிட்ஸ் மோட் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன்:
இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1நௌகட் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
லெனோவா மோட்டோ டேப்லெட் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல்.

7000எம்ஏஎச்:
இந்த லெனோவா மோட்டோ டேப்லெட் மாடலில் 7000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இணையம் மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப்லெட் மாடல்.

விலை:
லெனோவா மோட்டோ டேப்லெட் சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.19,650-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications