Home
Tablets

இதுக்காக தான் இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்! இனிப்பான செய்தியை சொன்ன Lenovo.!

இந்தியாவில் லெனோவா நிறுவனம் கம்மி விலையில் அசத்தலான டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லெனோவா லீஜியன் Y700 டேப்லெட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

குறிப்பாக இந்த லெனோவா லீஜியன் Y700 டேப்லெட் ஆனது ஜூலை 22 அன்று அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த டேப்லெட் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த டேப்லெட் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இதுக்காக தான் இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்!

லெனோவா லீஜியன் Y700 டேப்லெட் மாடல் 8-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான டேப்லெட். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 3.2ஜகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட், 16ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லெனோவா லீஜியன் Y700 டேப்லெட் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த லெனோவா டேப் எம்9 மாடலின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லெனோவா டேப் எம்9 ஆனதுஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் உடன் ஏஆர்எம் மாலி-5ஜி2 ஜிபியு வசதி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இதில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 வசதியைக் கொண்டுள்ளது. ஆனால் கூடிய விரைவில் இதற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்

லெனோவா டேப் எம்9 மாடல் ஆனது 9-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1340 x 800 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு லெனோவா டேப் எம்9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

8எம்பி ரியர் கேமராவுடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 2எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் 5100 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக இது 13 மணி நேரம் வீடியோ பிளேபேக் வழங்கும். பின்பு இதில் 18 மணி நேரம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகிறது.

4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அசத்தலான லெனோவா டேப் எம்9 மாடல். பின்பு இந்த டேப்லெட் மாடலின் விலை 344 கிராம். அதேபோல் இந்த லெனோவா டேப் எம்9 மாடல் ரூ.12,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ப்ளூ மற்றும் ஸ்டார்ம் கிரே நிறங்களில் இந்த டேப்லெட் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Legion Y700 tablet will be launched in India soon: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X