புது டேப்லெட் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வருகிறது Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா லீஜியன் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், டூயல் ரியர் கேமரா, 12ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது லெனோவா லீஜியன் டேப்லெட் (Lenovo Legion Tablet) மாடலின் முன்பதிவு தேதி மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் லெனோவா லீஜியன் டேப்லெட் மாடலை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வரும் ஜூலை 20-ம் தேதி முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலின் அறிமுக தேதியை வெளியிடவில்லை லெனோவா நிறுவனம். அதேபோல் இந்நிறுவனத்தின் லீஜியன் கோ (Legion Go) எனும் கையடக்க கேமிங் கன்சோல் ஜூன் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா லீஜியன் டேப்லெட் அம்சங்கள் (Lenovo Legion Tablet specifications): 8.8-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (QHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளே 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Snapdragon 8+ Gen 1) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லெனோவா லீஜியன் டேப்லெட். எனவே இதில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த டேப்லெட் அறிமுகமாகும். ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா லீஜியன் டேப்லெட் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது லெனோவா லீஜியன் டேப்லெட். எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம். மேலும் பீஸ்ட் மோட், பேலன்ஸ்டு மோட் மற்றும் எனர்ஜி சேவிங் மோட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லெனோவா லீஜியன் டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாதனம். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

6550எம்எஏச் பேட்டரி வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும் லெனோவா லீஜியன் டேப்லெட். எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதி உள்ளது. எனவே விரைவாக இந்த சாதனத்தை சார்ஜ் செய்துவிட முடியும்.
வைஃபை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் லெனோவா லீஜியன் டேப்லெட் ஆனது இந்தியாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications