Home
Tablets

கேமிங்னா இவருதான்.. QHD டிஸ்பிளே.. ஹேப்டிக் சிஸ்டம்.. 12GB ரேம்.. 6550mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

லேப்டாப் எதுக்கு? இந்த டேப்லெட் போதும் கேமிங்ல பின்னி எடுக்கலாம் என்று அடித்து சொல்லும்படி 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கியூஎச்டிபிளஸ் டிஸ்பிளே, ஹேப்டிக் சிஸ்டம், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6550mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், குவால்காம் 8பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் லெனோவா லிஜியன் (Lenovo Legion) மாடல் வெளியாக இருக்கிறது. இந்த ப்ரீமியம் லெனோவா டேப்லெட் குறித்த முழு விவரம் இதோ.

இந்த லெனோவா டேப்லெட் இந்த வாரத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 8.8 இன்ச் டிஸ்பிளே, 6550mAh மற்றும் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 சிப்செட் ஆகிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகவில்லை.

கேமிங்னா இவருதான்.. QHD டிஸ்பிளே.. ஹேப்டிக் சிஸ்டம்.. 12GB ரேம் டேப்!

இருப்பினும், ஜூலை 19ஆம் தேதியில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், கேமிங் பிரியர்கள் மரண வெயிட்டிங் மோடுக்கு சென்றுவிட்டனர். ஏனென்றால், இந்த லெனோவா லிஜியன் டேப்லெட் ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகி ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கியது. முதலில் இந்த மாடலின் பீச்சர்களை பார்ப்போம்.

லெனோவா லிஜியன் டேப் அம்சங்கள் (Lenovo Legion Tab Specifications): இந்த டேப்லெட்டில் 8.8 இன்ச் கியூஎச்டிபிளஸ் (QHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2.5K ரெசொலூஷன் வருகிறது. ஆகவே, இந்த டேப்லெட்டில் பிரீமியம் ஸ்ட்ரீமிங் அவுட்புட் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கு பட்டையை கிளப்பும் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென்1 4என்எம் எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8+ Gen 1 4nm SoC) சிப்செட் வருகிறது. இதுவொரு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட 5ஜி சிப்செட் மாடலாகும். ஆகவே, 5ஜி கனெக்டிவிட்டியும் இந்த டேப்லெட்டில் எதிர்பார்க்கலாம். இதுபோக ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) சப்போர்ட் உள்ளது.

மேலும், வை-பை 6இ (Wi-Fi 6E) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த லெனோவா லிஜியன் டேப்லெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் (microSD card Support) வருகிறது. 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

குவால்காம் குயிக் சார்ஜ் 3.0 (Qualcomm Quick Charge 3.0) டெக்னாஜி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6550mAh பேட்டரி வருகிறது. பீஸ்ட் மோட் (Beast Mode), பேலன்ஸ்டு மோட் (Balanced Mode), எனர்ஜி சேவிங் மோட் (Energy Saving Mode) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த லெனோவா லிஜியன் டேப்லெட்டில் டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொண்ட இந்த டேப்லெட்டின் குளோபல் மார்கெட் விலை ரூ.54,220ஆக இருக்கிறது. கிட்டத்தட்ட லேப்டாப்புக்கு நிகரான பீச்சர்கள் வருவதால், விலையும் அதிகமாக இருக்கிறது. இதே பட்ஜெட் அல்லது சற்று குறைவான விலையில் இந்த மார்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் இந்திய விலை நிர்ணயம் தெரிந்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Legion Tab With 12GB RAM, 6550mAh Battery To Sale From Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X