Home
Tablets

முடிச்சு விட்டீங்க போங்க.. 165Hz டிஸ்பிளே.. 6550mAh பேட்டரி.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 45W சார்ஜ்.. எந்த மாடல்?

165Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, ஆட்டோ போகஸ் கேமரா, 6550mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 3 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கும் லெனோவா லெஜியன் டேப் ஜென் 3 (Lenovo Legion Tab Gen 3) மாடல் களமிறங்கி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொடுக்கிறது.

லெனோவா லெஜியன் டேப் ஜென் 3 அம்சங்கள் (Lenovo Legion Tab Gen 3 Specifications): இந்த லெஜியன் டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் இசட்யுஐ 16.1 (ZUI 16.1) கிடைக்கிறது. 3 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. பர்ஃபாமென்ஸ் பீரிமியம் போன்களுக்கு நிகராக இருக்கும்படி சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.

முடிச்சு விட்டீங்க போங்க.. 165Hz டிஸ்பிளே.. 6550mAh பேட்டரி.. மாடல்?

ஆகவே, அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் யூனிட் மற்றும் ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 8 Gen 3) சிப்செட்டை கொடுக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப லாக்-ப்ரீ அவுட்புட் எதிர்பார்க்கும்படி 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட்டை இந்த டேப் கொடுக்கிறது.

டிஸ்பிளேவில் ஓடிடி பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. ஆகவே, இந்த லெனோவா லெஜியன் டேப் ஜென் 3 மாடலில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கும் 8.8 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz டச் சாம்பிளிங் ரேட் (கேமிங்) மற்றும் 288Hz டச் சாம்பிளிங் ரேட் (நார்மல்) கிடைக்கிறது.

மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் ஓடிடி பிரியர்களுக்கான எச்டிஆர்10 (HDR10) போன்ற பீச்சர்களும் வருகின்றன. இதுபோக 2.5K ரெசொலூஷன் இந்த டிஸ்பிளேவில் கிடைக்கிறது. இந்த லெனோவா லெஜியன் டேப் ஜென் 3 மாடலில் 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஃபிளாஷ் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் கிடைக்கிறது.

பிக்சட் போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆடியோவில் 2 சூப்பர்லீனியர் ஸ்பீக்கர்கள் (Superlinear Speakers) மற்றும் 1 மைக்ரோபோன்கள் வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் உள்ளது. அதேபோல யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இந்த லெனோவா லெஜியனில் 6550mAh பேட்டரி வருகிறது.

இந்த மீடியம்-சைஸ் பேட்டரிக்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், ஹீட் கன்ட்ரோலுக்காக கோல்ட்ஃப்ரண்ட் வேப்பர் சாம்பர் (ColdFront Vapor Chamber) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஃபைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் வருகிறது. டூயல் எக்ஸ்-ஆக்சிஸ் ஹாப்டிக்ஸ் (Dual X-axis Haptics) கிடைக்கிறது. இப்படி கேமிங் பீச்சர்களில் பின்னியெடுக்கிறது.

லெனோவா லெஜியன் டேப் ஜென் 3 மாடலானது ஃபுல் மெட்டல் டிசைனில் 7.79 மிமீ தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. அதேபோல 350 கிராம் எடை மட்டுமே வருகிறது. இதன் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் வை-பை 7 (Wi-Fi 7) சப்போர்ட் கொடுக்கிறது. எலிப்ஸ் பிளாக் (Eclipse Black) கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

லெனோவா லெஜியன் டேப் ஜென் 3 வெர்ஷனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,905 ஆக இருக்கிறது. இப்போது சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருப்பதால், இந்திய மார்கெட்டில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஏற்கனவே, லெனோவா டேப்லெட்கள் இந்தியாவில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த மாடலை விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Legion Tab Gen 3 With 12GB RAM 6550mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X