Home
Tablets

இந்தியா : லெனோவா அறிமுகப்படுத்தும் நான்கு புதிய டேப்லேட் மாடல்கள்.!

லெனோவா டேப் 4 10 பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (800-1280)பிக்சல் தீர்மான் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

லெனோவா நிறுவனம் தற்சமயம் நான்கு புதிய டேப்லேட் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இவற்றின் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் போன்றவை மிக அருமையாக உள்ளது. எனவே சந்தையில் அதிக அளவு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த டேப்லேட் மாடல்களை வாங்க முடியும்.

இப்போது வந்துள்ள டேப்லேட் லெனோவா மாடல்கள் : லெனோவா டேப் 4 10, லெனோவா டேப் 4 10 பிளஸ், லெனோவா டேப் 4 8 லெனோவா டேப் 4 8 பிளஸ் போன்ற மாடல்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

 லெனோவா டேப் 4 10 பிளஸ்:

லெனோவா டேப் 4 10 பிளஸ்:

இந்த டேப்லேட் மாடல் பொதுவாக 10.10-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1200-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின்பு 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த டேப்லேட் மாடல் இயங்கும். 7000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

லெனோவா டேப் 4 10 பிளஸ் விலை:

லெனோவா டேப் 4 10 பிளஸ் விலை:

4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ள இக்கருவியின் விலை ரூ.29,990ஆக உள்ளது, அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ள இக்கருவியின் விலை ரூ.24,990ஆக உள்ளது.

லெனோவா டேப் 4 10:

லெனோவா டேப் 4 10:

லெனோவா டேப் 4 10 பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (800-1280)பிக்சல் தீர்மான் இவற்றுள் இடம்பெற்றுள்ளது,மேலும் இதனுடைய பின்புற கேமரா 5மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 2மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

லெனோவா டேப் 4 10 நினைவகம்:

லெனோவா டேப் 4 10 நினைவகம்:

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 7000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.

 லெனோவா டேப் 4 8:

லெனோவா டேப் 4 8:

லெனோவா டேப் 4 8 விலைப் பொறுத்தவரை ரூ.12,900ஆக உள்ளது, அதன்பின்பு 8-இன்ச் டிஸ்பிளே மற்றும் (800-1280)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த டேப்லேட்
மாடல்.

லெனோவா டேப் 4 8 நினைவகம் :

லெனோவா டேப் 4 8 நினைவகம் :

இக்கருவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய பின்புற கேமரா 5மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 2மெகாபிக்சல் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது, 4850எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

  லெனோவா டேப் 4 8 பிளஸ்:

லெனோவா டேப் 4 8 பிளஸ்:

லெனோவா டேப் 4 8 பிளஸ் விலைப் பொறுத்தவரை ரூ.16,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு 8-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1200-1920)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த டேப்லேட் மாடல்.

  லெனோவா டேப் 4 8 பிளஸ் நினைவகம்:

லெனோவா டேப் 4 8 பிளஸ் நினைவகம்:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய பின்புற கேமரா 8மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது, 4850எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Lenovo Launches Four New Tablets in Its Tab 4 Series in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X