Home
Tablets

கொஞ்சம் பொறுங்க.. JBL ஸ்பீக்கர்கள், 10200mAh பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் புதிய Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

லெனோவா நிறுவனம் விரைவில் லெனோவா ஐடியா டேப் ப்ரோ (Lenovo Idea Tab Pro) எனும் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக கூகுள் ஜெமினி ஏஐ, சர்க்கிள் டு சர்ச், உடனடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட புதிய அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

லெனோவா ஐடியா டேப் ப்ரோ அம்சங்கள் (Lenovo Idea Tab Pro specifications): 12.7-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில்2944 x 1820 பிக்சல்ஸ், 3கே ரெசல்யூஷன் (3K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

இந்தியாவுக்கு வரும் புதிய Lenovo டேப்லெட்.. எந்த மாடல்?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 எஸ்ஒசி (MediaTek Dimensity 8300 SoC) சிப்செட் உடன் இந்த புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ZUI 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடல் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.

13எம்பி ரியர் கேமரா உடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேற கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 615 கிராம் ஆகும்.

10,200mAh பேட்டரி வசதியுடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட JBL இன் குவாட் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடல். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். வைஃபை 6E, புளூடூத் 5.3, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடலில் உள்ளன.

அமேசான் தளத்தில் லெனோவா ஐடியா டேப் ப்ரோ விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த லெனோவா டேப்லெட் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Idea Tab Pro Specifications Revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X