Home
Tablets

பின்றானே இவன்.. 10200mAh பேட்டரி.. 13 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. 13MP ஆட்டோபோகஸ் கேமரா.. எந்த மாடல்?

லெனோவோ நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் டேப்லெட் மாடலான லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 (Lenovo Idea Tab Pro Gen 2) இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே மட்டுமல்லாமல், 4 ஸ்பீக்கர்கள், 10200mAh பேட்டரி, ஆட்டோ போகஸ் கேமரா கொடுக்கிறது. இந்த லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 டேப்லெட்டின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட 4 ஜேபிஎல் (JBL Speakers) ஸ்பீக்கர்களை கொடுத்து ஆடியோவில் பட்டையை கிளப்பி இருக்கிறது. 3.5K ரெசொலூஷன் கொண்ட ப்யூர்சைட் டிஸ்பிளேவில் மிரளவிட்டுள்ளது. ஏஐ பவர்டு ஸ்மார்ட்டர் ஸ்டடி, ஏஐ நோட்ஸ் போன்ற ஏஐ பீச்சர்களையும் கொடுத்துள்ளது. ஸ்டூடண்ட்களுக்கு ஏற்ற பீச்சர்களுடன் கிடைக்க இருக்கிறது.

பின்றானே இவன்.. 10200mAh பேட்டரி.. 13 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்!

லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 அம்சங்கள் (Lenovo Idea Tab Pro Gen 2 Specifications): 13 இன்ச் (3540 x 2190 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 கொண்டுள்ளது. மேலும், 3.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 319 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்து உள்ளது.

தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட்டை கொடுத்து உள்ளது. லேட்டண்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 18 ஓஎஸ் (Android 18 OS) வரையில் அப்கிரேட் கொடுத்துள்ளது. குவால்காம் அட்ரினோ 825 ஜிபியு (Qualcomm Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

4 ஜேபிஎல் ஸ்பீக்கர்களை இந்த லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 கொடுக்கிறது. ஆகவே, ஸ்டீரியோ அனுபவம் பக்காவாக இருக்கும். மேலும், டால்பி அட்மோஸ் சப்போர்ட் கிடைப்பதால், குவாலிட்டியும் பட்டையை கிளப்பும்படி இருக்கும். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 10200mAh பேட்டரி கொடுத்து உள்ளது. 6.20 எம்எம் தடிமன் உள்ளது.

மேலும், 598 கிராம் எடை கொடுத்துள்ளது. லெனோவோ டேப் பென் பிளஸ் (Lenovo Tab Pen Plus) சப்போர்ட் கொடுத்துள்ளது. வை-பை 7 (Wi-Fi 7) மற்றும் ப்ளூடூத் 6 (Bluetooth 6) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா + 8 எம்பி பிக்சடு போகஸ் செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 விலை (Lenovo Idea Tab Pro Gen 2 Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. லெனோவோ ஈ-காமர்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக கிடைக்க இருக்கிறது.

லூனா கிரே (Luna Grey), கிளவுட் கிரே (Cloud Grey) மற்றும் ஜெல்லி மின்ட் (Jelly Mint) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கின்றன. 45W சார்ஜிங் அடாப்டருடன் கிடைக்க இருக்கிறது. கிட்டத்தட்ட லேப்டாப்புக்கு நிகரான அவுட்புட்டை இந்த லெனோவோ ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடலில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Lenovo Idea Tab Pro Gen 2 With 8GB RAM 10200mAh Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X