Lenovo அறிமுகம் செய்த புதிய 5ஜி டேப்லெட் .. 10200mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
லெனோவா நிறுவனம் இந்தியாவில் லெனோவா ஐடியா டேப் பிளஸ் (Lenovo Idea Tab Plus) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது 5ஜி டேப்டெல் ஆகும். பெரிய டிஸ்பிளே, 10200எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது. இப்போது இந்த லெனோவா டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
லெனோவா ஐடியா டேப் பிளஸ் அம்சங்கள் (Lenovo Idea Tab Plus Specifications): 12.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2.5கே ரெசல்யூஷன் (2.5K Resolution), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6400 பிராசஸர் (MediaTek Dimensity 6400 processor) உடன் இந்த லெனோவா ஐடியா டேப் பிளஸ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
13எம்பி ரியர் கேமராவுடன் இந்த லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்களும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் ஸ்டைலஸ் சப்போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் புதிய லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடலில் உள்ளன. அதுவும் இந்த சாதனம் வைஃபை மற்றும் புளூடூத் உடன் 5ஜி சப்போர்ட் வழங்குகிறது.
10200mAh பேட்டரி உடன் இந்த லெனோவா ஐடியா டேப் பிளஸ் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த லெனோவாடேப்லெட் மாடலின் எடை 530 கிராம் ஆகும். பின்பு லூனா கிரே நிறத்தில் இந்த புதிய சாதனத்தை வாங்க முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட லெனோவா ஐடியா டேப் பிளஸ் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.30,999-ஆக உள்ளது. டிசம்பர் 22 முதல் லெனோவா இணையதளம் மற்றும் அமேசான் தளத்தில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








