Home
Tablets

கடகடவென சரியும் Lenovo 5ஜி டேப்லெட் விலை.. 256ஜிபி மெமரி.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?

லெனோவா ஐடியா டேப் (Lenovo Idea Tab) ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்கி கிடைக்கிறது. 7040எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்தது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட லெனோவா ஐடியா டேப் மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை ரூ.18499 விலையில் வாங்கிவிட முடியும்.

கடகடவென சரியும் Lenovo 5ஜி டேப்லெட் விலை.. எந்த மாடல்?

லெனோவா ஐடியா டேப் அம்சங்கள் (Lenovo Idea Tab Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 ஆக்டகோர் பிராசஸர் உடன் இந்த லெனோவா ஐடியா டேப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

10.61-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லெனோவா ஐடியா டேப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 500 நிட்ஸ் பிரைட்னஸ், டியூவி ஐ கேர் சர்டிஃபிகேஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அதுவும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் லெனோவா ஐடியா டேப் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது.

அதேபோல் ZUI 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். அதேபோல் நான்கு வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 8எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது லெனோவா ஐடியா டேப் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. லூனா கிரே (Luna Grey) நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

லெனோவா ஐடியா டேப் 7040mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W சார்ஜ் ஆதரவும் உள்ளது. அதேபோல் லெனோவா டேப் பென் (Lenovo Tab Pen), லெனோவா டேப் பென் பிளஸ் (Lenovo Tab Pen Plus), ஃபோலியோ கீபோர்ட் (folio keyboard) போன்ற சாதனங்களுடன் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Idea Tab available at discounted price on Amazon: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X