Home
Tablets

மார்க்கெட்டே அதிர போகுது.. 12000mAh பேட்டரி.. 256GB மெமரி.. 12.6-இன்ச் டிஸ்பிளே.. எந்த டேப்லெட்?

லெனோவா நிறுவனம் அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்து சாதனங்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்ற என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய டேப்லெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது லெனோவா.

அதாவது லெனோவா நிறுவனத்துக்குச் சொந்தமான எரேசர் பிராண்ட் இப்போது எரேசர் கே30 பேட் 12.6 (Erazer K30 Pad 12.6) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் ஆனது அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் அருமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இதன் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மார்க்கெட்டே அதிர போகுது.. 12000எம்ஏஎச் பேட்டரி..  எந்த டேப்லெட்?

லெனோவா Erazer கே30 பேட் 12.6 அம்சங்கள் (Lenovo Erazer K30 Pad 12.6 Specifications): சியோமி பேட் 6 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த Erazer கே30 பேட். குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது 12.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக Erazer கே30 பேட் டிஸ்பிளேவில் 2560 x 1600 பிக்சல்ஸ், 350 நிட்ஸ் பீக் ப்ரைட்நஸ், 72 சதவீதம் என்டிஎஸ்சி கலர் காமட் (NTSC Color Gamut) 1500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதியுடன் இந்த நுசயணநச கே30 பேட் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த டேப்லெட் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Erazer கே30 பேட் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் இந்த Erazer கே30 பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் Erazer கே30 பேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல் உடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

12,000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது நுசயணநச கே30 பேட். எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் ஆனது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. பின்பு குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டேப்லெட். தற்போது Erazer கே30 பேட் 12.6 ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ.23,300-ஆக உள்ளது. விரைவில் Erazer கே30 பேட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lenovo Erazer K30 Pad 12.6 launched with 12000mAh battery: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X