Home
Tablets

அட்ராசக்கை..முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யும் iQOO.! அறிமுக தேதி இதுதான்.! ரெடியா இருங்க..

ஐக்யூ (iQOO) நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கனை அறிமுகம் செய்து வருகிறது. எனவே இந்நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஐக்யூ நிறுவனம் முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது ஒன்பிளஸ் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஐக்யூ நிறுவனமும் ஐக்யூ பேட் எனும் முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. குறிப்பாக வரும் 23-ம் தேதி இந்த ஐக்யூ பேட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அட்ராசக்கை..முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யும் iQOO.!

ஆனால் மே 23-ம் தேதி இந்த ஐக்யூ பேட் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளிவந்த ஐக்யூ பேட் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் ஐக்யூ பேட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 பிளஸ் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த டேப்லெட் மாடலின் மென்பொருள் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

12.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ பேட் மாடல். மேலும் இதன் டிஸ்பிளே 2.8கே ரெசல்யூசன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்ராசக்கை..முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யும் iQOO.!

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஐக்யூ டேப்லெட் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஐக்யூ டேப்லெட். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் புதிய ஐக்யூ பேட் வெளிவரும்.

10000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஐக்யூ பேட் அறிமுகமாகும். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான சாதனம் அறிமுகமாகும்.

அட்ராசக்கை..முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்யும் iQOO.!

குறிப்பாக ஐக்யூ பேட் மாடல் ஆனது ரூ.25,000-க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல அசத்தலான அம்சங்களுடன் இந்த ஐக்யூ டேப்லெட் வெளிவரும் என்பதால் அனைத்து நாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதேபோல் ஐக்யூ நிறுவனம் விரைவில் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO will launch its first tablet model on May 23: Check out the design, features and specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X