Home
Tablets

ஐக்யூ அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ்.. 9020mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஐக்யூ நிறுவனம் தனது புதிய ஐக்யூ பேட் அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த புதிய டேப்லெட் வெளியாகி உள்ளது. இப்போது ஐக்யூ பேட் அல்ட்ரா மாடலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐக்யூ பேட் அல்ட்ரா அம்சங்கள் (iQOO Pad Ultra Specifications): 8.8-இன்ச் 2.3கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1440×2304 பிக்சல்ஸ், 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஐக்யூ  அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. எந்த மாடல்?

தரமான ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 2என்எம் (Octa Core Snapdragon 8 Elite Extreme Gen 6 2nm) சிப்செட் உடன் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் அட்ரினோ 850 ஜிபியு (Adreno 850 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் க்யூ4 கேமிங் சிப் உடன் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் வெளியாகி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

OriginOS 7 HD சார்ந்த ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா உடன் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

பவர் பட்டனுடன் கூடிய கைரேகை சென்சார் உடன் வருகிறது ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல். பின்பு டூயல் ஸ்பீக்கர்கள் இந்த புதிய டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதுவும் இந்த மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஐக்யூ நிறுவனம்.

9020mAh பேட்டரி உடன் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

வைஃபை 7 802.11, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஐக்யூ பேட் அல்ட்ரா மாடலில் உள்ளன. ஸ்டாரி சில்வர் மற்றும் எண்டர் பிளாக் ஆகிய கலர்களில் இந்த டேப்லெட் வாங்க கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் எடை 298 கிராம் ஆகும்.

ஐக்யூ  அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. எந்த மாடல்?

தற்போது ஐக்யூ பேட் அல்ட்ரா மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 15 அன்று இந்த சாதனத்தின் முன்பதிவு சீனாவில் தொடங்குகிறது.

ஐக்யூ பேட் அல்ட்ரா விலை:

12ஜிபி + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் அல்ட்ரா 6499 yuan (இந்திய மதிப்பில் ரூ.92,965)-ஆக உள்ளது.
16ஜிபி + 256ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் அல்ட்ரா 7199 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,02,975)-ஆக உள்ளது.
16ஜிபி + 512ஜிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் அல்ட்ரா 7999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,14,420)-ஆக உள்ளது.
16ஜிபி + 1டிபி மெமரி கொண்ட ஐக்யூ பேட் அல்ட்ரா 8999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,28,725)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
iQOO Pad Ultra launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X